Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீக்கிரமே ஜோகோவிக் 'செட்டிலாகிறார்'...!

சிட்னி: உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கப் போகிறராம் - சீக்கிரமே.

செர்பியாவைச் சேர்ந்தவர் ஜோகோவிக். அவரது காலியான ஜெலீனா ரிஸ்ட்டிக்கும் அதே நாடுதான். இருவரும் நீண்ட நாட்களாக லவ் ஆல் சொல்லிக் கொண்டுள்ளனர்.

தற்போது தனது காதலியை கரம் பிடிக்க முடிவெடுத்து விட்டார் ஜோகோவிக். இதை தனது பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸாக போட்டுள்ளார்.

முதலிடத்தில் செஞ்சுரி

முதலிடத்தில் செஞ்சுரி

ஜோகோவிக் 100 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 முதல்

2006 முதல்

இன்று நேற்றல்ல, 2006ம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வருகின்றனர்.

பென்டாஸ்ட்டிக்

பென்டாஸ்ட்டிக்

தங்களது காதல் பென்டாஸ்ட்டிக்காக போய்க் கொண்டிருப்பதாக ஒருமுறை கூறியிருந்தார் ஜோகோவிக். இப்போது மாங்கல்யம் தந்துனானேவுக்கு தயாராகி விட்டனராம் இருவரும்.

செர்பியாவில் திருமணம்

செர்பியாவில் திருமணம்

செர்பியாவில் உள்ள ஜோகோவிக்கின் சொந்த ஊரில் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் இரு வீட்டார், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனராம்.

எல்லாமே ஓபன்தான்...

எல்லாமே ஓபன்தான்...

இருவரும் தங்களது காதலை ஒரு போதும் மறைத்ததில்லை. அதேபோல இவர்களுக்குள் சண்டை, சச்சரவு என்று எந்தக் கிசுகிசுவும் வந்ததும் இல்லை.

செம சப்போர்ட்

செம சப்போர்ட்

ரிஸ்டிக், ஜோகோவிக்குக்கு ரொம்பவே ஆதரவாக இருக்கிறார். கூடவே பயணிக்கிறார். போட்டிகளின்போது படு உற்சாகமாக குரல் எழுப்பி ஊக்குவிப்பார்.

என் சுவாசக் காற்றே...

என் சுவாசக் காற்றே...

ரிஸ்ட்டிக் குறித்து ஜோகோவிக் கூறுகையில், ஜெலீனாதான் எனது காதல், எனது வாழ்க்கை, எனது மூச்சுக் காற்று. மிகவும் மரியாதையானவர், அன்பானவர், தைரியசாலி. என்னை எப்போதும் ஊக்குவித்துக் கொண்டிருப்பவர். அவருடைய நினைவுகளும், அருகாமையும் என்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன என்று கூறியிருந்தார்.

காதல்னாலே... வாழ வைப்பதுதானே... !

Story first published: Thursday, September 26, 2013, 11:49 [IST]
Other articles published on Sep 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+