Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயஸ் - ஹிங்கிஸ் அபாரம்.. ஆஸி. கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.. செரீனாவுக்கு "சிங்கிள்"!

மெல்போர்ன்: 41 வயதான இந்தியாவின் லியாண்டர் பயஸ் தனது 15வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை இன்று வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் அவரும் சுவிடச்ரலாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸும் இணைந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்கள்.

இறுதிப் போட்டியில் இந்த ஜோடி, பிரெஞ்சு - கனடிய ஜோடியான கிறிஸ்டியானா மெலடோனோவிக், டேணியல் நெஸ்டர் இணையை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றனர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பயஸ் -ஹிங்கிஸ் ஜோடி பட்டையைக் கிளப்பியது.

Leander Paes-Martina Hingis Clinch Mixed Doubles Crown

ஹிங்கிஸ் இதற்கு முன்பு 14 முறை பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இது அவருக்கு 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

சானியா தோல்வி

மறுபக்கம் இந்தியாவின் சானியா மிர்ஸா ஏமாற்றத்தைக் கொடுத்தார். கலப்பு இரட்டையர் பிரிவின் அரை இறுதியில், சானியா மிர்ஸா - பிரேசலின் ப்ரூனோ சோரஸ் ஜோடி தோல்வியடைந்தது. இதனால் இறுதிப் போட்டியில் பயஸ் ஜோடியைச் சந்திக்கும் அரிய வாய்ப்பை சானியா ஜோடி தவற விட்டது.

Leander Paes-Martina Hingis Clinch Mixed Doubles Crown

"சிங்கம்" செரீனாவுக்கு சிங்கிள்

மகளிர் ஒற்றையர் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மரியா ஷரபோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார். இது செரீனாவுக்கு 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். மேலும் 6வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும்.

இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் மரியாவை வீழ்த்தினார்.

Story first published: Sunday, February 1, 2015, 13:08 [IST]
Other articles published on Feb 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+