விம்பிள்டன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் பூபதி-வெஸ்னினா ஜோடி தோல்வி

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜர்ஜன் மெல்ஸர் மற்றும் செக் நாட்டின் இவெட்டா பெனசோவா ஜோடி, இந்திய, ரஷ்ய ஜோடியை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இப்போட்டி 51 நிமிடங்களில் முடிவடைந்தது.
பூபதி-வெஸ்னினா ஜோடி செட்களைக் கைப்பற்ற கடுமையாக போராடியும் முடியவில்லை.
இந்தப் போட்டியில் பூபதி வென்றிருந்தால், லியாண்டர் பயஸ் வைத்துள்ள 12 கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமன் செய்திருக்கலாம். தற்போது பூபதி 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வைத்துள்ளார். இதில் 7 கலப்பு இரடடையர் மூலமும், 4 ஆடவர் இரட்டையர் போட்டியிலும் வந்தவையாகும்.
2990ம் ஆண்டு சானியாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்ற பூபதி அதன் பின்னர் எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லாமல் உள்ளார்.
லியாண்டர் பயஸைப் பொறுத்தவரை 6 இரட்டையர் பட்டங்களையும், 6 கலப்பு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications