ஊக்க மருந்து உட்கொண்டு மாட்டிக் கொண்ட டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா.. சஸ்பெண்ட்!
நியூயார்க்: டென்னிஸ் உலகின் முன்னாள் முதல்தர வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானதையடுத்து தற்காலிகமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.
அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார். ஷரபோவா மெல்டோனியம் என்ற மருந்தை பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மெல்டோனியத்தை கடந்த ஜனவரி மாதம்தான் ஊக்க மருந்தாக அறிவித்திருந்தனர்.

மெக்னீசியம் அதிகம்:
விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெல்டோனியத்தை எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் இதைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை:
இதனையடுத்து ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக மார்ச் 12 ஆம் தேதி வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

5 கிராண்ட்ஸ்லாம் வென்றவர்:
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இதுவரை 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதுவரை இந்த மாதத்தில் மட்டும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ள 7 வது வீரர் இவர் ஆகும்.

முழு பொறுப்பு நானே:
இது குறித்து அவர், "நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய ரசிகர்களையும், விளையாட்டினையும் தலைகுனிய வைத்துவிட்டேன். இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

நம்பிக்கை இருக்கின்றது:
நான் இந்த வழியில் இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications