Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்!

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் போட்டி காலிறுதியில் தோல்வியடைந்துவிடுவாரோ என்று கருதப்பட்ட நிலையில், களிமண் மைதானத்தின் ராஜா என்பதை ஸ்பெயினின் ரபேல் நடால் நிரூபித்துள்ளார். அரை இறுதிக்கு முன்னேறினார்.

122வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயினின் ரபேல் நடால், 11வது முறையாக பட்டம் வெல்வார் என்று போட்டி துவங்கும் முன்பே கணிக்கப்பட்டது.

நேற்று இரவு நடந்த கால் இறுதியில் அர்ஜென்டீனாவின் ஸ்குவார்ட்மானுடன் நடால் மோதினார். முதல் செட்டில் 6-4 என்ற கணக்கில் ஸ்குவார்ட்மான் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து 37 செட்களில் வென்று வந்த நடாலின் சாதனைக்கு அவர் பிரேக் போட்டார்.

நடாலை அவர் வென்று விடுவாரோ என்று நினைத்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்தது.

மீண்டும் நிரூபித்தார்

மீண்டும் நிரூபித்தார்

இதில் 4-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில் வென்று களிமண் மைதானத்தின் ராஜா என்பதை ரபேல் நடால் மீண்டும் நிரூபித்துள்ளார். இதுவரை 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

பெட்ரோவாவை சந்திக்கிறார்

பெட்ரோவாவை சந்திக்கிறார்

அரை இறுதியில் அர்ஜென்டீனாவின் ஜூவான் டெல் பெட்ரோவை அவர் சந்திக்க உள்ளார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மற்றும் இத்தாலியின் மார்கோ செசினாடோ மோதுகின்றனர்.

சாதனை சமன் செய்தார்

சாதனை சமன் செய்தார்

ஓபன் யுகத்தில் ஒரு ஓபன் போட்டியில் அதிக முறை அரை இறுதிக்கு முன்னேறிய ஜோர்ன் போர்க் மற்றும் ரோஜர் பெடரரின் சாதனையை 11வது முறையாக பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிக்கு நுழைந்து சமன் செய்துள்ளார் நடால். இதுவரை 10 முறை அரை இறுதி நுழைந்துள்ள நடேல், 10 முறையும் பட்டம் வென்றுள்ளார்.

பைனலில் ஹாலப், ஸ்லோன்

பைனலில் ஹாலப், ஸ்லோன்

மகளிர் பிரிவின் பைனலுக்கு யுஎஸ் ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் ருமேனியாவின் சிமோனா ஹாலப் முன்னேறினர். ஹாலப் மூன்றாவது முறையாக பைனல் நுழைந்துள்ளார்.

மகளிர் அரை இறுதியில் சக நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸை 6-4, 6-4 என்ற கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வென்றார். மற்றொரு அரை இறுதியில் சிமோனா ஹாலப் 6-1, 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை வென்றார்.

Story first published: Friday, June 8, 2018, 6:57 [IST]
Other articles published on Jun 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+