Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தால் சாதனையை இழந்தார் நடால்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், காயத்தால் புதிய சாதனையை படைக்கும் வாய்ப்பை ரபேல் நடால் இழந்தார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த பரபரப்பான காலிறுதியில் ஸ்பெயினின் ரபேல் நடால், குரேஷியாவின் மரின் சிலிக் மோதினர்.

Nadal missed out


இதில் 3-6, 6-3, 6-7, 6-2, என, முதல் செட்டை நடாலும், அடுத்ததை சிலிக்கும் மாறி மாறி வென்றனர். கடைசி செட்டில் 2-0 என்ற புள்ளிகளில் சிலிக் முன்னிலையில் இருக்க, திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டு, போட்டியில் இருந்து நடால் விலகினார். இதனால், சிலிக் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

2009ல் ஆஸ்திரேலிய ஓபன் வென்ற நடால், இரண்டாவது முறை வென்றால், நான்கு கிராண்ட் ஸ்லாம்களிலும் தலா 2 முறை பட்டம் வென்ற முதல் வீரராவார்.

ஆனால், அவருக்கும் ஆஸ்திரேலிய ஓபனுக்கும் ஏதோ ஒத்துவரவில்லை. இந்தாண்டையும் சேர்த்து, 16 ஆண்டுகளில் இதுவரை 13 முறை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் விளையாடியுள்ளார் நடால். அதில், நான்கு முறை பைனலுக்கு முன்னேறி ஒரு முறை மட்டுமே பட்டம் வென்றார்.

நேற்று நடந்த ஆட்டத்தில், 3 மணி நேரம் 21 நிமிடங்கள் விளையாடி, கடைசி செட்டில் வெற்றிக்கான வாய்ப்பு இருந்த நிலையில், தசை பிடிப்பால் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேற நேர்ந்தது.

இதற்கு முன்பும், இது போன்ற சூழ்நிலையை அவர் சந்தித்தார். 2010ல் ஆண்டி முர்ரே எதிரான காலிறுதியின்போதும் காயம் காரணமாக வெளியேறினார்.

ஒரு ஆண்டில் அனைத்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற சாதனையைப் புரியும் வாய்ப்பு நடாலுக்கு 20011ல் கிடைத்தது. ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியின்போது காயம் காரணமாக வெளியேறினார். 2014 பைனலுக்கு முன்பு ஏற்பட்ட வலியில் பைனலில் சரியாக செயல்பட முடியாமல் தோல்வியடைந்தார்.

நேற்று நடந்த மற்றொரு கால் இறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் – இங்கிலாந்தின் கைல் எட்மண்ட் மோதினர். இதில் 6-4, 3-6, 6-3, 6-4 என்ற :செட்களில் வென்ற எட்மண்ட் அரை இறுதியில் சிலிக்கை சந்திக்கிறார்.
Story first published: Wednesday, January 24, 2018, 13:53 [IST]
Other articles published on Jan 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+