6 ரவுண்டு.. ஃபுல் மப்பில் வந்து குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த டென்னிஸ் வீரர்.. ரசிகர்கள் செம குஷி!
கான்பெர்ரா : டென்னிஸ் உலகில் மிகப் பெரும் சர்ச்சை வீரர் என்றால் அது நிக் கிர்ஜியோஸ் தான்.
டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்களை எல்லாம் திட்டித் தீர்ப்பதையே வேலையாக வைத்துள்ளார்.
அவர் இந்த லாக்டவுன் நேரத்தில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான ஆண்டி முர்ரேவுடன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் "ரெட் வையின்" அருந்தி விட்டு வாய்க்கு வந்ததை உளறினார். ரசிகர்கள் சிரித்து செமயாக உற்சாகம் அடைந்தனர்.

வையின் அருந்தியபடி..
நிக் கிர்ஜியோஸ் இந்த லாக்டவுன் முழுவதும் குடியில் மூழ்கி விட்டார் போல. அத்துடன் தனக்கு பிடித்த ஒரே டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரேவுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ சாட் செய்தார் நிக் கிர்ஜியோஸ். லைவ்விலேயே லைட்டாக வையின் அருந்தியபடியே இருந்தார்.

எத்தனை ரவுண்டு போயிருக்கு?
நடுவே ஆண்டி முர்ரே எத்தனை ரவுண்டு அருந்தினாய்? என கேட்டார். அதற்கு விம்பிள்டனில் என்னை எத்தனை கேம்களில் தோற்கடித்தீர்களோ அத்தனை ரவுண்டு என்றார் கிர்ஜியோஸ். அதாவது ஆறு ரவுண்டு என்பதை இப்படி தெளிவாக கூறினார்.

ஐரோப்பிய வீரர்கள் பற்றி..
தான் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடுவதை விட அணியாக ஆடும் தொடர்களில் ஆட விரும்புவதாகவும், காரணம் ஐரோப்பிய வீரர்கள் அந்த தொடரில் தங்கள் அணியுடன் நட்புடன் இருப்பதை போல காட்டிக் கொள்வார்கள் என சரமாரியாக தாக்கினார்.

புகழ்ந்து தள்ளிய கிர்ஜியோஸ்
இந்த சாட்டில் முக்கால்வாசி நேரம் ஆண்டி முர்ரேவை பேச விடாமல் நிக் கிர்ஜியோஸ் தானே பேசிக் கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் ஆண்டி முர்ரேவே நம்ப முடியாமல் சிரிக்கும் அளவுக்கு அவரை புகழ்ந்து தள்ளினார் கிர்ஜியோஸ்.

காதலிக்கிறோம்
"நாங்கள் யாரும் ரபேல் நடால், நோவாக் ஜோகோவிக் மற்றும் ரோஜர் பெடரர் பற்றி கவலைப்பட மாட்டோம். நாங்கள் உங்களைத் தான் காதலிக்கிறோம். என்னைப் போன்ற சாதாரண மக்கள் உங்களைத் தான் காதலிக்கிறார்கள்" என புலம்பித் தள்ளினார்.

ஜோகோவிக்கை விட பெஸ்ட்
அதன் பின் ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜோகோவிக்கை மட்டம் தட்ட வேண்டி, "நான் பல முறை கூறி உள்ளேன். நீங்கள் ஜோகோவிக்கை விட சிறந்த வீரர்" எனக் கூறினார் கிர்ஜியோஸ். ஆனால், ஆண்டி முர்ரே அதை ஒப்புக் கொள்ளவில்லை.

ரொம்ப ஓவர்
தொடர்ந்து நிக் கிர்ஜியோஸ் உளறிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தான் சாட்டை முடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என "ரொம்ப ஓவரானதை" உணர்ந்து அவரே முடிவெடுத்தார். அப்போதும் அவர் புலம்பிக் கொண்டிருக்க, ஆண்டி முர்ரே சிரித்துக் கொண்டே சாட்டை முடித்தார்.

ரசிகர்கள் குஷி
டென்னிஸ் ரசிகர்கள் இந்த லாக்டவுனில் பார்க்காமல் விட்ட அத்தனை டென்னிஸ் தொடர்களையும் ஒன்றாக பார்த்தது போல இந்த லைவ் சாட்டை பார்த்து குஷியானார்கள். நிக் கிர்ஜியோஸ் பேசிய வசனங்களை ஒவ்வொன்றாக கூறி சமூக வலைதளங்களில் சிரித்து வருகிறார்கள். சிரிக்க வைப்பதும் நல்ல விஷயம் தானே!


Click it and Unblock the Notifications