Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பொடியனிடம்” தோற்று அதிர்ச்சிக்குள்ளான ரபேல் நடால்!

விம்பிள்டன், லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால்.

அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியவர் ஆஸ்திரேலியாவின் புதுப் புயல் நிக் கிர்கியோஸ். இவருக்கு 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது சுற்றோடு நடாலின் விம்பிள்டன் கனவு தரைமட்டமாகியுள்ளது. 19 வயது வீரரிடம் நடால் தோற்றது அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

நடால் ஸ்டைல் அதிர்ச்சி

நடால் ஸ்டைல் அதிர்ச்சி

கிட்டத்தட்ட நடாலுக்குக் கிடைத்தது அவரது ஸ்டைல் அதிர்ச்சி வைத்தியம்தான. கடந்த 2005ம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் இப்படித்தான் அப்போது 19 வயதான நடால், ரோஜர் பெடரரை தோற்கடித்து பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதே ஷாக்…

அதே ஷாக்…

இன்று அதே அதிர்ச்சியை அவரும் சந்தித்துள்ளது விசித்திரமானது.

அழுத்தம்.. பதட்டம்.. அபாரம்

அழுத்தம்.. பதட்டம்.. அபாரம்

நான்காவது சுற்றுப் போட்டியில் நடாலை அபாரமாக எதிர்கொண்ட நிக், நடாலுக்கு நிறையவே அழுத்தம் கொடுத்தார். பதட்டத்தை ஏற்படுத்தினார், தவறுகள் செய்யத் தூண்டினார். இறுதியில், 7 -6 (5), 5-7, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நடாலை வெளியேற்றினார்.

அதி வேக சர்வ்கள்

அதி வேக சர்வ்கள்

நிக்கின் சர்வ்கள் எல்லாமே அபாரமாக இருந்தன. நடால் பெரிதாகவே திணறிப் போய் விட்டார். அதிலும் முதல் சர்வ்களை அவர் மணிக்கு 133 மைல்கள் என்ற வேகத்தில் போட்டார். அதற்கு சளைக்காத வகையில்தான் இருந்தன மற்ற சர்வ்களும்.

அம்மா சொன்ன வார்த்தை

அம்மா சொன்ன வார்த்தை

தனது வெற்றி குறித்து நிக் கூறுகையில், இந்தப் போட்டிக்கு முன்பாக என்னிடம் பேசிய எனது தாயார், உன்னை விட நடால் சிறப்பானவர் என்று பாராட்டியிருந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. இப்போது எனது தாயார் என்ன சொல்வார் என்று அறிய விரும்புகிறேன் என்றார் சிரித்தபடி.

இன்னும் பேசவில்லை

இன்னும் பேசவில்லை

எனது தாயாருடன் இன்னும் பேசவில்லை. புன்னகை ஸ்மைலியை அவருக்கு அனுப்பி வைத்து மெசேஜ் மட்டும் கொடுத்துள்ளேன் என்றார் நிக்.

காலிறுதியில் கனடா வீரருடன்

காலிறுதியில் கனடா வீரருடன்

அடுத்து காலிறுதிப் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரானியாக்கைச் சந்திக்கிறார் நிக்.

Story first published: Wednesday, July 2, 2014, 12:21 [IST]
Other articles published on Jul 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+