Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்.. மனைவியும் தப்பினார்!

பெல்கிரேட் : ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நோவாக் ஜோகோவிக் 10 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார். அவரது பயிற்சியாளர் மற்றும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது.

தற்போது மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கும், அவரது மனைவியும் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

Novak Djokovic and his wife tested negative for coronavirus

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் டென்னிஸ் போட்டிகள் தடைப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நம்பர் 1 வீரரான நோவாக் ஜோகோவிக் செர்பியா மற்றும் அருகாமையில் உள்ள நாடுகளில் கண்காட்சி டென்னிஸ் தொடரை தாமே முன்வந்து நடத்தினார்.

சில முன்னணி டென்னிஸ் வீரர்கள் அந்த தொடரில் பங்கேற்றனர். செர்பியா, குரோஷியா ஆகிய நாடுகளில் நடந்த அந்த தொடரில் சமூக இடைவெளி, பாதுகாப்பு கவசம் அணிதல் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கடைபிடிக்கப்படவில்லை.

அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், இரண்டு நாடுகளில் இந்த தொடர் நடக்க இருந்த நிலையில், முன்னணி வீரர் கிரிகோர் டிமிட்ரோவ்வுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆனது.

அதை அடுத்து டென்னிஸ் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. டென்னிஸ் வீரர்கள் போர்னா கோரிக் மற்றும் விக்டோர் ட்ரோக்கி ஆகியோருடன் நோவாக் ஜோகோவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார்.

அவரது மனைவியும், பயிற்சியாளரும் கூட பாதிப்புக்கு உள்ளனார்கள். முன்னெச்சரிக்கை இன்றி தொடரை நடத்திய நோவாக் ஜோகோவிக் மீது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும் திரும்பியது. அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கிடையே அவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பத்து நாட்களில் மீண்டுள்ளார். அவருடன் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவரது மனைவியும் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக அவரது ஊடக தொடர்புக் குழு தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, July 2, 2020, 22:12 [IST]
Other articles published on Jul 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+