Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 10வது முறையாக கைப்பற்றி அசத்தினார்.

கடந்த முறை, கொரோனா தடுப்பூசி காரணமாக ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில், இழந்த பெருமையை திருப்பி மீட்கும் முனைப்பில் ஜோகோவிச் விளையாடினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் கிரிஸ் வீரர் சிட்சிபாசுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினார்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

விறுவிறுப்பான இந்த போட்டியில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி, சிட்சிபாசை சிதறடித்தார். ஜோகோவிச் தாம் ஏன் ஜாம்பவான் என்பதை நிரூபித்தார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சிட்சிபாசை, ஜோகோவிச் ஓட விட, முதல் செட்டை 6க்கு3 என்ற கணக்கில் தனதாக்கினார்.

டை பிரேக்கர்

டை பிரேக்கர்

இதனைத் தொடர்ந்து 2வது செட்டில் சிட்சிபாஸ் அதிரடியாக ஆடினாலும் ஜோகோவிச்சின் அனுபவத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டிலும் இரு வீரர்களும் மாறி மாறி பாயிண்ட்ஸ்களை எடுக்க டை பிரேக்கர் வரை நீடித்தது. இதில் ஜோகோவிச் வெற்றி பெற்று 7க்கு6 என்ற செட்டை வென்றார்.

ஜோகோவிச் வெற்றி

ஜோகோவிச் வெற்றி

இதன் பிறகு மூன்றாவது செட்டை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று சிட்சிபாஸ் தலைக் கீழ் நின்று தண்ணீர் குடிக்காத குறை தான். ஆனால், ஜோகோவிச் இந்த செட்டிலும் அபாரமாக ஆடினார். இதனையடுத்து, இந்த செட்டும் டை பிரேக் வரை சென்றது. இதில் ஜோகோவிச் 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 2 மணி நேரம் 54 நிமிடம் வரை நீடித்தது.

சாதனை படைத்த ஜோகோவிச்

சாதனை படைத்த ஜோகோவிச்

இதன் மூலம் 6க்கு3, 7க்கு6, 7க்கு6 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் 10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். ஆஸி. ஓபன் பட்டத்தை அதிக முறை வெனற வீரர் என்ற பெருமையை அவர் தான் பெற்று இருக்கிறார். ஒட்டு மொத்தமாக இது ஜோகோவிச் வெல்லும் 22வது கிராண்ட் ஸ்லாம் தொடராகும். இதன் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர் பட்டியலில் முதலிடம் உள்ள நடாலை ஜோகோவிச் சமன் செய்தார்.

Story first published: Sunday, January 29, 2023, 17:55 [IST]
Other articles published on Jan 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+