Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டனில் புதிய வரலாறு.. ரோஜர் பெடரர் ரெக்கார்டை உடைத்த நோவக் ஜோகோவிச்.. 106 வெற்றிகள்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் ரோமன் சபியுல்லினை வீழ்த்தி தனது 106-வது விம்பிள்டன் வெற்றியைப் பதிவு செய்த ஜோகோவிச், விம்பிள்டன் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்து காலிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 105 வெற்றிகளை பெற்று இருந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஜோகோவிச் தனது விம்பிள்டன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளார். தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை நோக்கி முன்னேறி வரும் ஜோகோவிச், இப்போட்டியில் கடும் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைத் தன்வசமாக்கினார்.

Novak Djokovic Secures Historic 106th Wimbledon Win Against Roman Safiullin to Reach Quarter-Finals

ஆட்டத்தின் தொடக்கத்தில் 7-வது வரிசை வீரரான ஜோகோவிச்சின் சர்வீஸை சபியுல்லின் இரண்டு முறை முறியடித்து அதிர்ச்சி அளித்தார். எனினும், சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் முதல் செட்டை டைபிரேக்கர் வரை கொண்டு சென்று கைப்பற்றினார். 2023-ல் விம்பிள்டன் காலிறுதி வரை முன்னேறிய 28 வயதான சபியுல்லின், சளைக்காமல் போராடினார். முதல் இரண்டு செட்களை ஜோகோவிச் கைப்பற்றிய பிறகு, மூன்றாவது செட்டில் சபியுல்லின் மருத்துவ இடைவெளி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் ஜோகோவிச்சின் சர்வீஸை முறியடித்து அந்த செட்டை சபியுல்லின் கைப்பற்றினார்.

ஆனால், நான்காவது செட்டில் ஜோகோவிச் தனது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சபியுல்லினின் சர்வீஸை ஒரு புள்ளி கூட கொடுக்காமல் முறியடித்த ஜோகோவிச், இறுதியில் நெட் பகுதிக்கு அருகில் ஒரு நுணுக்கமான டிராப்-ஷாட் மூலம் வெற்றியை உறுதி செய்தார். இப்போட்டியில் ஜோகோவிச் தனது முதல் சர்வீஸில் 69 சதவீத புள்ளிகளையும், ரிசீவிங் ஆட்டத்தில் 38 சதவீத புள்ளிகளையும் வென்று அசத்தினார்.

“பல முறை முயற்சி செய்தேன்.. எல்லாம் முடிந்து விட்டது”.. கதறி அழுது ஓய்வை அறிவித்த நெய்மர்!

“பல முறை முயற்சி செய்தேன்.. எல்லாம் முடிந்து விட்டது”.. கதறி அழுது ஓய்வை அறிவித்த நெய்மர்!

வெற்றிக்குப் பின் பேசிய நோவக் ஜோகோவிச், "தப்பிப் பிழைத்து வெல்வது என்பது போன்ற உணர்வே எனக்கு இப்போது இருக்கிறது. நமது மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதை தற்போதைய தருணத்தில் ஒருமுகப்படுத்துபவரே உண்மையான வெற்றியாளர்" என்று கூறினார்.

Story first published: Monday, July 6, 2026, 7:50 [IST]
Other articles published on Jul 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+