Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.ஓபன்… நேர் செட்களில் நடாலை வீழ்த்திய ஜோக்கோவிச்… 7வது முறையாக மகுடம் சூடி அபாரம்

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதி போட்டியில் நடாலை வீழ்த்தி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஜோக்கோவிச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த இரு வாரங்களாக மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி முடிவுக்கு வந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரும் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ரபேல் நடாலை முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் எதிர்கொண்டார்.

Novak djokovic thrashes rafale nadal in ausi open mens final

தொடக்கத்தில் இருந்தே இருவரும் விட்டுக் கொடுக்காமல்ஆடியதால், விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏறக்குறைய 2 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் நடாலை 6-க்கு 3, 6-க்கு 2, 6-க்கு 3 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வீழ்த்தினார்.

Novak djokovic thrashes rafale nadal in ausi open mens final

நடாலை வீழ்த்தியவுடன், டென்னிஸ் மைதானத்தை தலைவணங்கி முத்தமிட்டு ஜோக்கோவிச் மகிழ்ந்தார். அதற்கு முன் 2012ம் ஆண்டு இருவரும் மோதிய ஆட்டம் 5 மணி நேரம் 53 நிமிடங்கள் நடந்தது. இதுதான் ஆஸ்திரேலியன் ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்தஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியாகும்.

ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் 2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோக்கோவிச் கோப்பையை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Story first published: Sunday, January 27, 2019, 19:19 [IST]
Other articles published on Jan 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+