Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3.1/2 மணி நேர போராட்டம்.. விம்பிள்டனில் வரலாற்று வெற்றி.. சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று செர்பியாவின் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.

உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னின்ஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

விம்பிள்டன்

விம்பிள்டன்

இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), இத்தாலியின் மாட்டியோ பெரெட்டினியை எதிர்த்து மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் இரு வீரர்களும் கடும் சவால் கொடுத்தனர். இதனால் முதல் செட்டில் 7-6 என கடின போராட்டத்திற்கு பின்பு ஜோகோவிச் கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

பின்னர் சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச், ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-7, 6-4, 6-4, 6-3 என ஜோகோவிச் வெற்றி பெற்றார். மொத்தம் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச்சுற்றில் தனது ஆக்ரோஷ ஆட்டம் மூலம் வெற்றியை ருசித்தார்.

சமனான சாதனை

சமனான சாதனை

செர்பியாவை சேர்ந்த வீரரான ஜோகோவிச் விளையாடிய 30வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இதுவாகும். இதுமட்டுமல்லாமல் தற்போது 20 முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

Recommended Video

Serena Williams கண்ணீருடன் வெளியேறினார்! என்ன நடந்தது ? | Oneindia Tamil
4 முறை சாம்பியன்

4 முறை சாம்பியன்

நடப்பாண்டில் ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன் தொடர் என ஏற்கனவே பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தற்போது விம்பிள்டன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அடுத்து வரும் யுஎஸ் ஓபன் தொடரிலும் பட்டம் வென்றுவிட்டால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Sunday, July 11, 2021, 22:48 [IST]
Other articles published on Jul 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+