For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

14வது கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிக்..அமெரிக்க ஓபன் இறுதியில் சாதனை வெற்றி

நியூயார்க் : அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ மற்றும் முன்னணி வீரர் ஜோகோவிக் மோதினர்.

அதில் ஜோகோவிக் வெற்றி பெற்று தன் 3வது அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். இது இவரது 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ஜோகோவிக் தொடர்ந்து விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.

பரபரப்பான இறுதிப் போட்டி

பரபரப்பான இறுதிப் போட்டி

சனிக்கிழமை நடந்த அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செரீனா போட்ட சண்டையால் பலத்த சர்ச்சை எழுந்து முடிந்த நிலையில், நேற்று ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி பரபரப்பாக நடந்தது. டெல் போட்ரோ சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஓபன் பட்டம் வென்று இருந்தார். தன் காயம் காரணமாக நீண்ட காலமாக சரியான ஆட்டம் கைக்கு வராமல் இருந்த அவர் நீண்ட போராட்டத்துக்கு பின் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதே சமயம், அறுவைசிகிச்சை முடிந்து நீண்ட காலம் பார்ம் அவுட்டில் இருந்த ஜோகோவிக் விம்பிள்டன் வென்று மீண்டும் தன் உச்சத்தை தொட்ட நிலையில், மீண்டும் ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதியில் ஆட வந்தார்.

டெல் போட்ரோ போராட்டம்

டெல் போட்ரோ போராட்டம்

ஆட்டம் துவங்கியது முதல் ஜோகோவிக் கைதான் ஓங்கி இருந்தது. முதல் செட்டை அவர் 6-3 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் விட்டதை பிடிக்க முயன்ற டெல் போட்ரோ 3-3 என போராடி சம நிலைக்கு வந்தார். இரண்டாவது செட் நீண்ட போராட்டத்துக்கு பின் 7-6 என ஜோகோவிக் வசம் வந்தது. மூன்றாம் செட்டிலும் டெல் போட்ரோ தா முயற்சியை தொடர்ந்தார். 3-3 என சம நிலையை எட்டியவர், அதன் பின் பின்தங்கினார். ஜோகோவிக் 6-3 என மூன்று செட்களையும் அடுத்தடுத்து வென்று பட்டத்தையும் கைப்பற்றினார்.

வெற்றிக்கு பின் ஜோகோவிக்

வெற்றிக்கு பின் ஜோகோவிக்

வெற்றி பெற்ற பின் பேசிய ஜோகோவிக், "என் மோசமான காலத்திலும் என்னுடன் இருந்த என் குழந்தைகள், மனைவி, என் சிறிய குழு அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துக் கொண்டார். பின், "எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, ஜுவான் மார்ட்டின் என்ன பிரச்சனைகளை அறுவை சிகிச்சைகளுக்கு பின் அனுபவித்தார், எதனால் அவர் இரண்டு, மூன்று வருடம் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார் என்பதை புரிந்து கொண்டேன்" என டெல் போட்ரோவுக்கு ஆதரவாக பேசினார்.

ஜோகோவிக் சாதனைகள்

ஜோகோவிக் சாதனைகள்

இந்த கிராண்ட்ஸ்லாம் வெற்றியின் மூலம் ஜோகோவிக் சில சாதனைகள் செய்துள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ஆண்கள் பட்டியலில் பீட் சாம்ப்ராஸ்-இன் மூன்றாம் இடத்தை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் இடத்தில் ரோஜர் பெடரர் 20 பட்டங்களோடும், இரண்டாம் இடத்தில் நடால் 17 பட்டங்களோடும் இருக்கின்றனர். மேலும், ஜோகோவிக்கின் இந்த வெற்றியோடு, டென்னிஸில் "பிக் ஃபோர்" என அழைக்கப்படும் நான்கு நட்சத்திர வீரர்கள் (பெடரர், நடால், ஜோகோவிக், ஆண்டி முர்ரே) கடந்த 55 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 50ஐ வென்று சாதித்துள்ளனர்.

Story first published: Monday, September 10, 2018, 14:03 [IST]
Other articles published on Sep 10, 2018
English summary
Novak Djokovic won US open 2018, his 14th Grandslam title to equals pete sampras
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+