பாரிஸ் : 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2 முறை சாம்பியனான ரஃபேல் நடால், அதிர்ச்சி தோல்வியை தழுவினார். பாரிஸ் நகரில் இதே களிமண் தரை மைதானத்தில் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை நடால் வென்று இருக்கிறார்.
தாம் முடிசூடா மன்னாக விளங்கிய தன்னுடைய ராஜ்ஜியத்தில் நடால், இன்று மிகப் பெரிய தோல்வியை தழுவி இருக்கிறார். 38 வயதான ஸ்பெயின் வீரர் நடால், இரண்டாவது சுற்றில் ஜோகோவிச்சை சந்தித்தார். காயம் மற்றும் வயது மூப்பு காரணமாக நடால், சற்று களத்தில் தடுமாறினார்.

புலியாக ஜோகோவிச், காயமடைந்த தவித்த சிங்கமாக தவித்த நடாலை சுவைத்து ருசித்து வேட்டையாடினார். முதல் செட்டில் ஜோகோவிச் 5 கேம்களை வென்ற பிறகு, நடால் போராடி முதல் கேம்மை வென்றார். இதன் மூலம் முதல் செட்டை ஜோகோவிச் 6க்கு1 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதை அடுத்து, இரண்டாவது செட்டில் நடால் எப்படியாவது வென்றுவிட் வேண்டும் என தன்னுடைய போர் குணத்தை காட்டினார். ஆனால், ஜோகோவிச் டாப் பார்மில் இருந்ததால், நடாலால் போராடி வெல்ல முடியவில்லை. இதன் மூலம் 6க்கு4என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்று, நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார்.
இதன் மூலம், கடந்த 2008 பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதியில் நடாலுடன் அடைந்த தோல்விக்கும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் நடாலுடன் அடைந்த தோல்விக்கும் இன்று ஜோகோவிச் பழித்தீர்த்து கொண்டார். இதனால் நடாலின் ஒற்றையர் பிரிவு பயணம் பாரிஸில் முடிவுக்கு வந்தது.