மீண்டும் நம்பர் ஒன் ஆனார்கள் லியாண்டர் பயஸ்-மகேஷ்பூபதி

உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் நாடே கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக வந்து சேர்ந்துள்ளது பயஸ், பூபதியின் இந்த புதிய வெற்றி.
மியாமி போட்டித் தொடரில் பயஸ், பூபதி ஜோடி, பெலாருஷ்யன், கனடா ஜோடியான மேக்ஸ் மிர்னயி, டேணியல் நெஸ்டர் ஜோடியை 6-7 (5), 6-2, 10-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றது.
இந்தப் பட்டத்தை வெல்வது பயஸுக்கு இது 2வது முறையாகும். கடந்த வருடம் அவர் லூகாஸ் லோஹியுடன் இணைந்து வென்றிருந்தார். இருப்பினும் மகேஷ் பூபதிக்கு இது முதல் பட்டமாகும்.
இந்த வெற்ஏறியின் மூ்லம் இந்திய ஜோடி மீண்டும் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களை பின்னுக்குத் தள்ளி விட்டனர் பயஸும், பூபதியும்.
இந்த ஆண்டு பயஸும், பூபதியும் இணைந்து ஆடி பெறும் 2வது பட்டம் இது. ஏற்கனவே சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை இந்திய ஜோடி வென்றிருந்தது.
பயஸ், பூபதி ஜோடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருப்பது இந்திய டென்னிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications