11.... 1.... பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லப் போவது யார்... பைனலில் நடாலுடன் மோதுகிறார் தியம்!
பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பைனலில் ஸ்பெயினின் ரபேல் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் தியாமும் மோத உள்ளனர். இதில் நடால் வென்றால் 11வது முறையாகவும், தியாம் வென்றால் முதல் முறையாகவும் பட்டம் வெல்வர்.
ஆண்டின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. 122வது முறையாக நடக்கும் இந்த ஆண்டு போட்டியில் மகளிர் ஒற்றையரில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் பட்டம் வென்றார்.
பைனலில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் வென்று முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஹாலப் வென்றார். உலகின் நம்பர் 1 வீராங்கனையான அவர் தான் பங்கேற்ற நான்காவது பைனலில் பட்டம் வென்றார்.
ஆடவர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் துவங்குவதற்கு முன்பே, ஸ்பெயினின் ரபால் நடால்தான் இந்த முறை பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு ஓபன் போட்டியில் அதிக முறை பட்டம் வென்ற சாதனை நடாலிடம் உள்ளது.

இன்று பைனல்
இந்த பிரெஞ்ச் ஓபனின் நிறைவு ஆட்டமாக ஆடவர் ஒற்றையர் பைனல் இன்று இரவு நடக்கிறது. இதில் ஸ்பெயினின் ரபேல் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் தியாமும் மோத உள்ளனர்.

நடால் சாதனை
2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017 என 10 முறை வென்று, ஓபன் யுகத்தில் ஒரு கிரண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்றுள்ளார்.

முதல் பைனல்
உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும், களமண் மைதான ராஜாவான நடால் இதுவரை 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதே நேரத்தில் உலகத் தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கும் தியாம், முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனல் நுழைந்துள்ளார்.

தியாமா நடாலா
இருவரும் இதுவரை 9 முறை மோதியுள்ளனர். அதில் 6 முறை நடால் வென்றுள்ளார். இன்றைய பைனலில் வென்றால், 11வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை நடால் பெறுவார். அதே நேரத்தில் தியமுக்கு இது முதல் ஓபன் பட்டமாக அமையும்.


Click it and Unblock the Notifications