Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சிறந்த மனிதனாக நினைவில் இருக்க விரும்புகிறேன்" டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

மலகா: டெவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டெவிஸ் கோப்பையுடன் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்ததால், இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தப் போட்டியை நேரில் காண்பதற்காக ரஃபேல் நடால் மனைவி, குழந்தை, சகோதரி உள்ளிட்டோர் நேரில் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட போதே ரஃபேல் நடால் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார். பின்னர் 38 வயதான நடால் நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கினார். இந்தப் போட்டியில் 4-1 என்று பின் தங்கிய நடால், பின்னர் ஆட்டத்தில் 4-3 என்று வேகமாக முன்னேறி வந்தார். ஆனால் முதல் செட்டை 6-4 என்றும், 2வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் இழந்தார்.

rafael nadal tennis french open

இதன்பின் நெதர்லாந்து அணியின் டாலனை 7-6, 6-3 என்ற கணக்கில் அல்காரஸ் வீழ்த்தினாலும், இரட்டையர் பிரிவில் போடிக் வான் டி - வெஸ்லி கூட்டணி 7-6, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் - மார்செல் கூட்டணியை வீழ்த்தியது. இதனால் ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்க, ரஃபேல் நடாலின் பயணம் முடிவுக்கு வந்தது. டெவிஸ் கோப்பையில் விளையாடி டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கிய நடால், முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தார்.

தற்போது டென்னிஸ் டெவிஸ் கோப்பையின் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்து டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஃபேல் நடால் பேசுகையில், அனைவருக்கும் குட்-பை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து சூழல்களிலும் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். வாழ்வில் நடக்கவே இயலாத விஷயங்களில் கூட குடும்பத்தினர் அனைவரும் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

அதேபோல் வெற்றியால் உச்சத்திற்கு சென்ற போதும், அவர்களால் தான் நான் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்திருக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், அதனை எளிமையாக கையாள முடியும் என்று நம்புகிறேன். அதற்காக பயிற்சிகளை செய்து வருகிறேன். டென்னிஸ் இல்லாமல் இருப்பது கடினம் தான். ஆனால் வாழ்க்கையில் நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் முறையான பயிற்சியும், அதற்கேற்ப தகவமைத்து கொண்டதும் தான் காரணம். இதற்கு மேல் டென்னிஸ் விளையாட முடியாது என்று என் உடல் சொல்லிவிட்டது. அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனது பொழுதுபோக்கையே தொழிலாக மாற்ற முடிந்தது. கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள், வெற்றிக் கணக்குகள் உள்ளிட்டவை எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரசிகர்களின் மனதில் ஒரு சிறிய கிராமமான மலோர்காவில் பிறந்த வளர்ந்த சிறந்த மனிதனாக நினைவில் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியை காண்பதற்கு ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நேரில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 20, 2024, 10:41 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+