Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன் டென்னிஸ் பைனலில் நடால்… பெடரரை காலி செய்தவரை வெளியேற்றி அபாரம்

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டியின் இறு திச் சுற்றுக்கு செக். குடியரசு வீராங்கனை பெட்ரோ கிவிட்டோவா, ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் முன்னேறியுள்ளனர்.

இந்தாண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், சுவிட்சர்லாந்தின் இளம் வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபினோஸ் சிட்ஸிபஸ் எதிர்கொண்டார்.

Rafale nadal beats greek player stefanos tsitsipas enters into australian open tennis final

கடந்த வருட சாம்பியனான ரோஜர் பெடரரரை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்கு வந்தவர் தான் இந்த ஸ்டெபினோஸ் சிட்ஸிபஸ். அதனால், இந்த ஆட்டத்தில் நடால் அதிரடியாக விளையாடினார்.

அவரது அபாரமான சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல் ஸ்டெபினோஸ் சிட்ஸிபஸ் திணறினார். இறுதியில் நடால் 6க்கு 2, 6க்கு 4, 6க்கு 0 என்ற நேர் செட்களில் ஸ்டெபினோஸ் சிட்ஸிபசை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பரபரப்பாக நடந்த இந்த அரையிறுதி போட்டியில், அதிரடியாக வென்ற ரபேல் மக்களின் ஆரவாரத்தோடு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2009 ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நடால் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் சேர்பியாவை சேர்ந்த நோவோக் டிஜோகோவிக் அல்லது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த லூகாஸ் பௌலியோடு மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடைபெற்ற மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் செக். குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா , அமெரிக்காவின் டேனிலி ரோஸ் கோலின்ஸ் ஆகியோர் மோதினர்.அதில் கிவிட்டோவா 7க்கு 6 (7-2), 6க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறை யாக ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி யுள்ளது குறிப்பிடத்தக்கது.மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6க்கு 2, 4க்கு 6, 6க்கு 4 என்ற நேர் செட் களில் செக். குடியர சின் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தினார்.

Story first published: Friday, January 25, 2019, 13:19 [IST]
Other articles published on Jan 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+