சானியா - சொராப் நிச்சயதார்த்த முறிவுக்கு மகேஷ் பூபதி காரணமா?

சானியா மிர்ஸாவின் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பார்ட்னராக இருப்பவர் மகேஷ் பூபதி. இருவருக்கும் இடையே நீண்ட கால தொழில்முறை நட்பு நிலவி வருகிறது.
ஆனால் சமீப காலமாக இந்த நட்பு தொழில்முறை என்பதையும் தாண்டிப் போய் விட்டதாக டென்னிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
வருடத்தில் உள்ள 52 வாரங்களில், விளையாட்டுப் போட்டிகள் காரணமாக கிட்டத்தட்ட 40 வாரஙகள் மகேஷ்பூபதியும், சானியாவும் சேர்ந்தேதான் இருக்கின்றனர்.
போட்டியின்போது மட்டுமல்லாமல் போட்டிக்குப் பிறகும் கூட இருவரும் நிறைய நேரங்களை சேர்ந்தே செலவிடுகிறார்களாம்.
மகேஷ் பூபதி 6 மாதங்களுக்கு முன்புதான் தனது மனைவி ஸ்வேதா ஜெய்சங்கரை விவாகரத்து செய்தார் என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
சில விஷயங்களில் தனது பெற்றோர், நண்பர்கள் சொல்லும் அறிவுரையைக் கூட சானியா கேட்க மாட்டாராம். ஆனால் மகேஷ் பூபதி சொன்னால் உடனே ஏற்றுக் கொண்டு விடுவாராம்.
பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார் சானியா. இதுவே அவரது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு லியாண்டர் பயஸுக்கும், மகேஷ் பூபதிக்கும் இடையே பிரச்சினை வெடித்தபோது பூபதிக்குப் பின்னால் நின்றார் சானியா.
மேலும், பெங்களூரில் உள்ள மகேஷ் பூபதியின் டென்னிஸ் அகாடமியில்தான் சானியா பயிற்சி எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சானியாவை பிறருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருவது இது முதல் முறையல்ல. முன்பு பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருடன் இணைத்துப் பேசப்பட்டது. இருவரும் பெங்களூர் வின்சர் ஷெரட்டன் ஹோட்டலில் ஜோடியாக வந்து போனதாக செய்திகள் கூட வெளியாகின.
அதேபோல 2007ம் ஆண்டு நடந்த பாலிவுட் திரைப்பட விழாவின்போது சானியாவும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரும், ஷாஹித்தும் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு சேர்ந்து போனதாகவும் செய்திகள் வெளியாகின.
அதேபோல கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நவதீப் பல்லப்போலு என்பவருடன் சேர்த்து சானியா கிசுகிசுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் சானியாவின் நிச்சயதார்த்தம் முறிந்து போனதற்கு அவருக்கும், மகேஷ் பூபதிக்கும் இடையிலான நட்பே காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications