நாளுக்கு நாள் டர்ட்டி ஆகும் சண்டை: பயஸ் மீது ரியா பிள்ளை வழக்கு
மும்பை: டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தன்னை தாக்கி துன்புறுத்தியதாக அவரின் முன்னாள் லிவ் இன் பார்ட்னரான ரியா பிள்ளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸும், மாடல் அழகியான ரியா பிள்ளையும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 8 வயதில் அயானா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இந்த பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

பந்த்ரா வீடு
லியாண்டர் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்குள் தன்னையும், மகளையும் நுழைய விடாமல் கதவை பூட்டியதாக ரியா பிள்ளை கடந்த மே மாதம் 8ம் தேதி தெரிவித்தார். இதையடுத்து தான் அவர்களிடையேயான பிரச்சனை பெரிதானது. இருவரும் பிரிந்தனர்.

பெண் தொடர்பு
லியாண்டருடன் சேர்ந்து வாழ துவங்கிய காலத்தில் இருந்தே அவர் எனக்கு உண்மையாக இல்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று ரியா பிள்ளை குற்றம் சாட்டினார்.

மகள்
ரியா தங்கள் மகளை ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லை என்றும், அதனால் அயானாவை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரி லியாண்டர் கடந்த மாதம் குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.

தாக்குதல் வழக்கு
லியாண்டர் பயஸும், அவரது தந்தையும் தன்னை தாக்கி துன்புறுத்தியதாக ரியா மும்பை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு மாதாமாதம் செலவுக்கு லியாண்டர் ரூ. 4 லட்சம் தர வேண்டும் என்று ரியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications