ரியோ ஒலிம்பிக்கில் டாப் 5 டென்னிஸ் வீரர்கள் விலகல்.. ரசிகர்கள் அதிர்ச்சி! நடால் வருகை ஆறுதல்
ரியோ டீ ஜெனிரோ: டென்னிஸில் உலனின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ர*ஃபேல் நடால் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் முன்னணி வீரர்கள் ஐவர் பங்கேற்கவில்லையாம்.
உலகின் முன்னணி வீரரான சுவிச்சர்லாந்தின் வாங்ரிங்கா ரியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். அவர் கடனாவில் நடைபெற்ற ரோஜர் கோப்பை தொடரின் போது காயமடைந்ததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதேபோல, சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், கனடாவின் மிலோஸ் ரோனிக், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோரும் ரியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளதால், தரவரியில் டாப் 10-ல் உள்ள 5 வீரர்கள் இந்த ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். ரஃபேல் நடால் இதுவரை 14 முறை கிராண்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். முன்னதாக காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற பிரென்ச் ஓபனில் நடால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் நடால் பங்கேற்கிறார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என அனைத்து போட்டிகளிலும் நடால் பங்கேற்கவுள்ளார்.
சுவிச்சர்லாந்தினின் ரோஜர் ஃபெடரர் முழுங்கால் காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். தரவரிசையில் 3-வது இடத்ததில் உள்ள அவர் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ரோனிக் மற்றும் 8-வது இடத்தில் உள்ள பெர்டிச் ஜிகா வைரஸை காரணம் காட்டி ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications