Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்ஸ் 2016: சானியா - போப்பண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா-போப்பண்ணா இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமையன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்ஸா , ரோகன் போப்பண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்ட்ரோச்சர்-ஜான் பியஸை ஏதிர்கொண்டனர்.

Rio Olympics: Sania Mirza-Rohan Bopanna enter quarters

இந்த போட்டியில் சானியா , போப்பண்ணா ஆகியோர் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்ட்ரோச்சர்-ஜான் பியஸ் ஜோடியை 7-5 ,6-4 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியின் முலம் அவர்கள் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ரசித்த லியாண்டர்

இந்த வெற்றியை டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டு உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். களத்தில் சானியாவும், போபண்ணாவும் ஆக்ரோசமாக ஆடியதை ரசிகர்களுடன் அமர்ந்து லியாண்டர் பயஸ் உற்சாகப்படுத்தினார். டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, August 12, 2016, 7:59 [IST]
Other articles published on Aug 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+