சின்சினாட்டி மாஸ்டர்ஸ்.... ரோஜர் பெடரர், ஜோகோவிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி : அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில், முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிக் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜோகோவிக் - கிரிகோர் டிமிட்ரோவ் ஆடிய மூன்றாவது சுற்றுப் போட்டி மோசமான வானிலை காரணமாக தடைப்பட்டு நேற்று மீண்டும் நடத்தப்பட்டது. அந்த ஆட்டத்தில் 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்ற ஜோகோவிக், அடுத்த சில மணி நேரங்களில் காலிறுதிப் போட்டியில் பங்கேற்றார்.

காலிறுதியில் மிலோஸ் ரோனிக்கை சந்தித்த அவர் 7-5, 4-6, 6-3 என்ற செட்களில் வென்று அசத்தினார். ஒரே நாளில் இரண்டு முக்கியமான போட்டிகளில் வென்றார் ஜோகோவிக்.
முதல் நாள் இரவு 10.30க்கு அறைக்கு சென்ற ஜோகோவிக், மறுநாள் மீதமிருந்த ஒரு போட்டியையும், காலிறுதிப் போட்டியையும் ஆடியது குறிப்பிடத்தக்கது.
ரோஜர் பெடரர், வாவரின்காவை 21வது முறையாக வீழ்த்தி சாதனை புரிந்தார். 6-7(2), 7-6(6), 6-2 என கடுமையான போராட்டத்திற்குப் பின் வென்றார்.
அரையிறுதியில் பெடரர், டேவிட் கோப்பினையும், ஜோகோவிக், மரின் சிலிக்கையும் சந்திக்க உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், சைமோனா ஹலேப், சபலன்காவையும், பெட்ரா கேவிடோவா, கிகி பெர்டேன்ஸ்-ஐயும் அரை இறுதியில் சந்திக்க உள்ளனர்.
Story first published: Sunday, August 19, 2018, 10:53 [IST]
Other articles published on Aug 19, 2018


Click it and Unblock the Notifications