வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..!
பாட்மிங்கென் : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள டென்னிஸ் சாம்பியன் ரோஜர் பெடரர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரபரப்புடன் இயங்கி வருகிறார்.
Recommended Video
தொடர்ந்து தான் வீட்டிற்குள்ளேயே டென்னிஸ் பிராக்டீஸ் செய்யும் வீடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரோஜர். இதன்மூலம் இளம் தலைமுறையினருக்கும் பல்வேறு யுக்திகளை அவர் கடத்தி வருகிறார்.
இந்நிலையில், தான் டென்னிஸ் பிராக்டீஸ் செய்யும் சமீபத்திய வீடியோவை வெளியிட்டுள்ள ரோஜர், வீட்டிலேயே பயிற்சி செய்யும் சவாலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.

வீட்டிலேயே முடங்கிய விளையாட்டு
சர்வதேச அளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பீதிக்கு உலக அளவில் அனைத்து செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. ஆயினும் அவற்றை வீட்டிலிருந்து கொண்டே செயல்படுத்தி வருகின்றனர் அத்துறையை சேர்ந்தோர். ஆனால் வீட்டிலேயே முடங்கியுள்ள விளையாட்டுத்துறையை மீட்டெடுக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது.

வீரர்கள் செய்வதறியாது தவிப்பு
சர்வதேச அளவில் விம்பிள்டன், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகள் ரத்து அல்லது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே தங்களது பிட்னெசை அவர்கள் பேணி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்புடன் அவர்கள் இயங்கி வருகின்றனர்.

தொடர் டென்னிஸ் பயிற்சி
இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தொடர்ந்து தன்னுடைய வீட்டிலிருந்தபடியே டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், பனிகொட்டும் பொழுதில் தன்னந்தனியாக இவர் மேற்கொண்ட பயிற்சியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தன்னந்தனியாக பயிற்சி
இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே சுவற்றை துணையாக கொண்டு, ரோஜர் பெடரர் மீண்டும் தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தன்னுடைய வீட்டில் உள்ள சுவற்றில் பந்தை விடாமல் அடித்து அவர் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு வீடியோ மூலம் பதிலளிக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டேக் செய்த ரோஜர்
மேலும் இந்த பயிற்சியை மேற்கொள்ள முடியுமா என விராட் கோலி, பில் கேட்ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரபேல் நடால் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு அவர் சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளார். அவர்கள் இந்த சவாலை ஏற்று வீட்டிலிருந்தபடியே பயிற்சி செய்து வீடியோவை பகிரவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications