அவர் நாகல் தான்..! ஒன்றும் நடால் இல்ல..! இந்திய வீரரால் மிரண்டும், திமிராக பேசிய பெடரர்..!! #USOpen
Recommended Video
நியூயார்க்: சுமித் நாகலுடன் மோதிய முதல் தம்மை திணறடித்தாலும், அவர் ஒன்றும் நடால் இல்லையே என்று முன்னணி வீரர் ரோஜர் பெடரர் கூறி இருக்கிறார்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து ஸ்டார் வீரர் ரோஜர் பெடரர், இளம் இந்திய வீரர் சுமித் நாகலை எதிர்கொண்டார். போட்டியின் முதல் சுற்றை 4க்கு 6 என கைப்பற்றி பெடரருக்கு உதறல் கொடுத்தார் சுமித் நாகல்.
அந்த அதிர்ச்சி பெடரருக்கு நிச்சயம் எழுந்திருக்கும். காரணம் 2003ம் ஆண்டுக்கு பிறகு முதல் சுற்றுப் போட்டியின் முதல் செட்டை பெடரர் இழப்பது இதுவே முதன் முறை. எனவே அடுத்த செட்டுகளில் சுதாரித்துக் கொண்டார்.

2 மணி 30 நிமிடங்கள்
கிட்டத்தட்ட 2 மணிநேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் சுதாரித்து கொண்ட பெடரர் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி, தம்மை சாம்பியன் தான் என்று நிலைநிறுத்தி கொண்டார். முடிவில், 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி பெடரர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கொஞ்சம் கடினம்
வெற்றி குறித்து போட்டி முடிந்த பின்னர் களத்தில் பேட்டியளித்தார் பெடரர். அப்போது அவர் பேசியதாவது: உண்மையை சொல்ல வேண்டும் எனில் முதல் செட் கொஞ்சம் கடினமாகவே இருந்தது எனக்கு. நிறைய பந்துகளை விளையாட முடியாமல் விட்டுவிட்டேன்.

மாற்றிக் கொண்டேன்
சுமித் நாகல் முன்னிலை பெற்றார். அதற்கு பிறகு, அனைத்தும் நல்ல விதமாக நடந்தது. சரியான நேரத்தில் சுதாரித்து எனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டேன். அதன் பிறகான செட்டுகளை எனதாக்கி கொண்டேன்.

அவர் நடால் கிடையாது
ஸ்கோர் போர்டில் நாகல் என்ற எழுத்தில் உள்ள ஆங்கில எழுத்தான ஜி என்பதற்கு பதில் டி என மாற்றிவிட்டோம். அதனால் அவரை நடாலின் ஆட்டம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரங்கத்தில் இருந்து பெரும் அதிர்வலைகள் எழுந்தன.

நான் நினைக்கவில்லை
அதற்கு லேசாக ஜெர்க்காகி பதிலளித்த பெடரர், நான் அப்படி நினைக்கவில்லை. அவர் ஒன்றும் நடால் இல்லை. ஊடகங்கள் தான் அப்படி சித்திரிக்கின்றன என்று கூறினார். எது எப்படி இருந்தாலும், ஒரு ஜாம்பவானை கொஞ்ச நேரத்தில் அலற வைத்துவிட்டார் என்று ரசிகர்கள் நாகலுக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications