Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீட்டில் முடங்கினாலும் பரபர... டிரிக் ஷாட்களை வெளிப்படுத்திய ரோஜர் பெடரர்

புதுடெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்விஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், தன்னுடைய வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆனால் ஆடின கால்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தன்னுடைய வீட்டிலேயே அவர் தனியாக டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த பயிற்சியின்போது அவருடைய தனித்துவமான டிரிக் ஷாட்களை அவர் பயிற்சி செய்தார்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரோஜர் பெடரர் இந்த பயிற்சி குறித்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் வென்றவர்

20 கிராண்ட்ஸ்லாம் வென்றவர்

சர்வதேச அளவில் கவனத்தை கவர்ந்துள்ளவர் ஸ்விஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவர், தன்னுடைய பிரத்யேக ட்ரிக் ஷாட்களுக்கு பெயர் போனவர். உலக அளவில் இவருக்கான ரசிகர்கள் அதிகளவில் உள்ள நிலையில், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்மூலம் அவர்களை தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறார் பெடரர்.

பல தொடர்களில் விளையாடாத பெடரர்

பல தொடர்களில் விளையாடாத பெடரர்

இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய வலது மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து துபாய் ஓபன், இந்தியன் வெல்ஸ் தொடர் மற்றும் பிரெஞ்ச் ஓபன் ஆகிய போட்டிகளில் தன்னால் பங்கேற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரோஜர் பெடரர் பங்கேற்க வாய்ப்பு

ரோஜர் பெடரர் பங்கேற்க வாய்ப்பு

இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக மேற்குறிப்பிட்ட தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர்களில் பெடரர் பங்கேற்க தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிற்கு அவர் நிதியுதவியும் வழங்கியுள்ளார்.

வீட்டிற்குள் முடங்கிய பெடரர்

வீட்டிற்குள் முடங்கிய பெடரர்

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெடரர் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது மூட்டுவலியிலிருந்து அவர் தேறவும் இந்த காலகட்டம் அவருக்கு பெரிதும் உதவி வருகிறது. ஆயினும் தன்னுடைய பயிற்சிகளை அவர் விட்டுக் கொடுப்பதாயில்லை. தொடர்ந்து பயிற்சிகளை தன்னுடைய வீட்டிலேயே மேற்கொண்டு வருகிறார் பெடரர்.

டிரிக் ஷாட்களை வெளிப்படுத்திய பெடரர்

இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய வீட்டிலிருந்தபடியே தன்னுடைய பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார் பெடரர். பனிகொட்டும் காலை வேளையில், தன்னுடைய வீட்டின் கோர்ட்டில் அவர் தன்னந்தனியே, பயிற்சியை குறிப்பாக, தன்னுடைய டிரிக் ஷாட்களை பயிற்சி செய்து வருகிறார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Story first published: Tuesday, March 31, 2020, 13:35 [IST]
Other articles published on Mar 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+