Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பர் 1 இடத்தை பிடித்த ரோகன் போபண்ணா - மேட் எப்டன் ஜோடி.. டென்னிஸ் உலகில் மாபெரும் சாதனை

டெல்லி : இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா உலக தர பட்டியலில் நம்பர்-1 இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் இணை ஆடவர் இரட்டையர் தரவரிசையில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் ஜோடி என்ற இடத்தை பிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியை காலிறுதியில் சந்தித்த ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி 6 - 4, 7 - 6 (7 - 5) என்ற செட்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு அந்த ஜோடி முன்னேறியது.

Rohan Bopanna - Matt Ebden bcame World No.1 tennis pair

இந்த வெற்றி மூலம், ஆடவர் இரட்டையர் தரவரிசையில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி இடத்தை பிடித்தது. உலகிலேயே மிக அதிக வயதில் தரவரிசையில் முதல் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையையும் ரோகன் போபண்ணா பெற்றார். 43 வயதாகும் போபண்ணா இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

அவர் முதன் முறையாக 2008இல் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆடத் துவங்கினார். அதன் பின் இரட்டையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் தொடரில் ஒரு முறையும், விம்பிள்டன் தொடரில் மூன்று முறையும் அவர் அரையிறுதி வரை முன்னேறி இருந்தார். ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதுவரை அவர் மூன்றாவது சுற்றுக்கு மேல் முன்னேறியதில்லை. அந்த குறையை இந்த முறை போக்கி இருக்கிறார். அடுத்து அரையிறுதியில் அவர் வென்றால் கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெருமையை பெறுவார்.

அவரது ஜோடியான மேத்யூ எப்டன் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். அவர் தன் சொந்த மண்ணில் அரையிறுதி வரை முன்னேறி இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் ஆடவர் இரட்டையர் தரவரிசையிலும் முதல் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறார்.

Story first published: Wednesday, January 24, 2024, 11:31 [IST]
Other articles published on Jan 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+