Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கத்தார் ஓபன் இரட்டையர் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா - வெஸ்லி ஜோடி.. சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை!

தோஹா : கத்தார் எக்ஸான்மொபில் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பட்டத்தை இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் ஜோடி வென்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அன்று நடந்த கத்தார் ஓபன் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பிரிட்டிஷ் / மெக்சிகன் ஜோடியான லூக் பாம்ப்ரிட்ஜ் மற்றும் சாண்டியாகோ கோன்சலஸ் ஆகியோரை சந்தித்தது இந்த ஜோடி.

Rohan Bopanna, Wesley Koolhof won Qatar Open Tennis Doubles title

அந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் 3-6, 6-2, 10-6 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா - வெஸ்லி ஜோடி வெற்றி பெற்று கத்தார் ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்றது.

ரோகன் போபண்ணா மற்றும் கூல்ஹோஃப் இணைந்து கைப்பற்றும் மூன்றாவது சாம்பியன்ஷிப் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி பற்றி கூறுகையில், "உடனடியாக வெற்றி பெறும்போது அது நன்றாக இருக்கிறது," என்றார் போபண்ணா. மேலும், "தோஹாவில் முதன்முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்போதும் இந்தியாவில் விளையாடியிருக்கிறேன். ஜோடியாக இணைய வெஸ்லி கிடைத்தபோது, குறிப்பாக வெற்றிகரமான 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவருடன் விளையாட இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது... ஆண்டை ஒரு பட்டத்துடன் தொடங்குவது நல்ல விஷயம்" என்றார்.

ஏடிபி சீசன்களின் முதல் சில வாரங்களில் பட்டம் வெல்வதில் போபண்ணா மற்றும் கூல்ஹோப் சாதனை செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாக, இருவரும் சீசனின் தொடக்க வாரங்களில் 2017 மற்றும் 2019 ஆண்டுகளை அடுத்து 2020இலும் பட்டங்களை வென்றுள்ளனர்.

Story first published: Saturday, January 11, 2020, 10:35 [IST]
Other articles published on Jan 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+