அமெரிக்க ஓபன்-சானியா, பூபதி, பயஸுக்கு வெற்றி
நியூயார்க்:அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மகேஷ் பூபதி ஜோடி அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் தாத்யானா குலோவின் - பாப் பிரையன் ஜோடியை பூபதி - சானியா ஜோடி சந்திக்கவுள்ளது.
ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்ஸா ஏற்கனவே 3வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி ஏற்கனவே 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
மற்றொரு கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் லியாண்டர் பயஸ் - மேகான் ஷாக்னாசி ஜோடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. பயஸ் ஜோடி ஜேனட் ஹுசரோவா, பாவெல் விஸ்னர் ஜோடியை 7-5, 6-3 என்ற செட்களில் வீழ்த்தியது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications