Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன்: ஒற்றையர் முதல் சுற்றிலேயே சானியா 'அவுட்'-டபுள்ஸுக்கு 'டவுட்'!

Sania Mirza
லண்டன்: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே சானியா மிர்ஸா தோல்வி அடைந்து வெளியேறினார். அதேசமயம், இரட்டையர் பிரிவில் அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

விம்பிள்டனுக்கும் சானியாவுக்கும் ஒத்தே வராது. இது இந்த முறையும் நிரூபணமானது. முதல் சுற்றில் அவர் பிரான்ஸின் விர்ஜீனி ரஸ்ஸனோவை சந்தித்தார்.

இப்போட்டியில் 6-7, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் சானியா கடுமையாகப் போராடி தோல்வியடைந்தார். தன்னை விட தர வரிசையில் மிகவும் குறைந்தவரிடம் சானியா தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 7 முறை விம்பிள்டன் ஒற்றையர் போட்டிகளில் சானியா கலந்து கொண்டுள்ளார். அதில் முதல் சுற்றோடு அவர் வெளியேறுவது இது 3வது முறையாகும். மற்ற நான்கு முறையும் 2வது சுற்று வரை போயிருந்தார் சானியா.

இரட்டையர் போட்டியில் ஆடுவது சந்தேகம்

இதற்கிடையே, சானியாவுக்கு முழங்காலில் காயமடைந்துள்ளது. இதனால் அவர் இரட்டையர் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

இரட்டையர் பிரிவில் அவர் ரஷ்யாவின் எலீனா வெஸ்னினாவுடன் இணைந்து விளையாடத் திட்டமிட்டுள்ளார். இந்த ஜோடி சமீபத்தில் முடிவடைநத் பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறியது நினைவிருக்கலாம்.

அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவிலும் விளையாட திட்டமிட்டுள்ளார் சானயா. ஆனால் அவரது கால் வலி மற்றும் காயம் ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்து இது அமையும்.

2வது சுற்றில் சோம்தேவ்

இந்தியாவின் சோம்தேவ் தேவர்மன், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் ஜெர்மனியின் டெனிஸ் கிரீம்லிமேயரை அவர் வீழ்த்தினார்.

போட்டி 6-4, 4-2 என்ற கணக்கில் இருந்தபோது ஜெர்மனி வீரர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து சோம்தேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+