பைலட் பென் டென்னிஸ்: சானியா, பூபதி சாம்பியன்!
நியூ ஹேவன்:அமெரிக்காவின் நியூ ஹேவன் நகரில் நடந்த பைலட் பென் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சானியா மிர்ஸா ஜோடி அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் சானியா பெறும் 4வது இரட்டையர் பட்டம் இது.
இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சானியா, மரியா சான்டேஞ்சலோ ஜோடி தகுதி பெற்றது. இதில், காரா பிளாக், லீஸல் ஹூபர் ஜோடியை எதிர்த்து மோதி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றது.
சானியா மிர்ஸா இந்த சீசனில் பெறும் 4வது இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இதுவரை 7 இரட்டையர் சாம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.
இந்த சீசனில் கடந்த மே மாதம் மொரக்கோ இரட்டையர் போட்டி, பின்னர் கடந்த மாதம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார் சானியா.
இதேபோல ஆடவர் பிரிவு இரட்டையர் போட்டியிலும் இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications