Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா.. முதல் முறையாக பைனலில் நுழைந்து சாதனை!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - ஹோரியா டெக்கா ஜோடி நுழைந்துள்ளது.

இந்த ஜோடி, அரை இறுதியில், ஜெர்மிலா கஜ்டோசோவா மற்றும் மாத்யூ எப்டன் ஜோடியை 2-6, 6-3, 10-2 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றது.

சானியாவுடன் ஜோடி சேர்ந்த ஹோரியா ருமேனியாவைச் சேர்ந்த வீராங்கனை. எதிர்த் தரப்பில் மோதிய இருவரும் ஆஸ்திரேலியர்கள் ஆவர்.

முதல் முறையாக இறுதிப் போட்டி

முதல் முறையாக இறுதிப் போட்டி

சானியா மிர்ஸா இதற்கு முன்பு மகளிர் இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை வந்துள்ளார். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் ஒரு இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 போட்டிகளில் விளையாடியவர் சானியா

9 போட்டிகளில் விளையாடியவர் சானியா

9 போட்டிகளில் விளையாடியவர் சானியா

மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில்

மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில்

மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

ஒற்றையர் போட்டியில் இதுவரை

ஒற்றையர் போட்டியில் இதுவரை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் அதிகபட்சமாக 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் இவர் 3வது சுற்று வரை போயிருந்தார்.

இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை

இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை

அதேபோல இரட்டையர் பிரிவில் 2012ம் ஆண்டு அரை இறுதி வரை முன்னேறி சாதனை படைத்திருந்தார்.

7 மற்றும் 10

7 மற்றும் 10

கலப்பு இரட்டையர் பிரிவில் 7வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 10வது இடத்திலும் சானியா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 24, 2014, 11:38 [IST]
Other articles published on Jan 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+