Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 145 பாயிண்ட் எடுத்தா போதும்.. சானியா நம்பர் 1!

டெல்லி: இந்தியாவின் டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா தனது டென்னிஸ் வாழ்க்கையின் முக்கிய கட்டத்துக்கு வெகு அருகில் வந்து விட்டார். மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் தரவரிசைக்கு வெகு அருகே அவர் வந்து விட்டார். இன்னும் 145 புள்ளிகள் மட்டுமே அவருக்கு தேவைப்படுகிறது.

மியாமி ஓபன் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று சாதனை படைத்த சானியா தரவரிசைப் பட்டியலில் 7495 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

இன்னும் 145 புள்ளிகளை அவர் எடுத்தால் முதல் ரேங்க்கைப் பெறுவார் சானியா. மகளிர் பிரிவில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த எந்த வீராங்கனையும் முதல் ரேங்க்கைப் பெற்றதில்லை என்பதால் சானியா புதிய வரலாறு படைக்கவுள்ளார்.

முதலிடத்தில் சாரா - ராபர்ட்டா

முதலிடத்தில் சாரா - ராபர்ட்டா

தற்போது முதல் இடத்தில் இத்தாலிய வீராங்கனைகள் சாரா இர்ரானி, ராபர்டா வின்சி ஜோடி உள்ளது. இவர்கள் தலா 7640 புள்ளிகளுடன் முதல் ரேங்க்கில் உள்ளனர்.

மார்ட்டினாவுடன் 2வது பட்டம்

மார்ட்டினாவுடன் 2வது பட்டம்

மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பிறகு சானியா வெல்லும் 2வது பட்டமாகும் இது. தற்போது 7495 புள்ளிகளுடன் சானியா 3வது இடத்தில் இருக்கிறார்.

பேமிலி சர்க்கிளை வென்றால்

பேமிலி சர்க்கிளை வென்றால்

அடுத்து இந்த வாரம் சார்ல்ஸ்டன் நகரில் பேமிலி சர்க்கிள் கோப்பைக்கான டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. அதில் மார்ட்டினா - சானியா ஜோடிதான் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் தர வீராங்கனைகளாக களம் இறங்குகின்றனர்.

பச்சை கிளே

பச்சை கிளே

ஆனால் இந்தப் போட்டி நடக்கும் கோர்ட், க்ரீன் கிளே ஆகும். சானியாவுக்கு இதில் சரியான பயிற்சியும், பழக்கமும் கிடையாது. ரெட் கிளேயி்தான் அவர் பட்டையைக் கிளப்புவார். இருந்தாலும் சானியா நம்பிக்கையுடன் உள்ளார்.

வென்றால் போதும்

வென்றால் போதும்

இதில் வென்றால் போதும் சானியா மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்து விடுவார். புதிய வரலாறு படைப்பார்.

தேவ்வர்மன்

தேவ்வர்மன்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 171வது இடத்தில் இருக்கிறார். இது 5 இடங்கள் முன்னேற்றமாகும். ராம்குமார் ராமநாதன் 233வது இடத்தில் இருக்கிறார்.

23வது இடத்தில் லியாண்டர்

23வது இடத்தில் லியாண்டர்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 23வது இடத்தில் இறுக்கிறார். 24வது இடம் ரோஹன் போபண்ணாவிற்கு.

Story first published: Monday, April 6, 2015, 11:38 [IST]
Other articles published on Apr 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+