சானியாவுடன் கைகோர்த்தார் செக்.குடியரசு வீராங்கனை பார்போரா ஸ்ட்ரைகோவா!
லண்டன்: அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிசில் தனது புதிய ஜோடியான செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் களமிறங்கினார் சானியா மிர்சா.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் தனது முன்னாள் ஜோடியான சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ், அமெரிக்காவின் கொகோ வன்டெவெகே ஜோடியை எதிர்கொண்டது.

இதில், 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற சானியா - பார்போரா ஜோடி, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டிக்கு முன்பாக சானியாவும் ஹிங்கிஸூம் இரட்டையர் தரவரிசையில் முதலாவது இடத்தில் இணைந்து இருந்தனர். இந்தநிலையில், இந்த வெற்றியைத் தொடர்ந்து, தனது முதலிடத்தை சானியா தக்க வைத்துக் கொண்டார். எனினும் ஹிங்கிஸ், 2ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார்.
சானியா-ஹிங்கிஸ் ஜோடி 14 டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளனர். உலகின் நம்பர் 1 இரட்டையர் ஜோடியாக பரிணமித்துள்ளனர், தொடர்ச்சியாக போட்டிகளை வென்றும் சாதனை படைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications