Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரிந்து சென்ற மார்டினாவை நேர் செட்களில் வீழ்த்தி, இரட்டையர் டென்னிசில் முதலிடம் பிடித்த சானியா

லண்டன்: மகளிர் இரட்டையர் பிரிவு தர வரிசையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா (இந்தியா)-பார்போரா ஸ்ட்ரிகோவா (செக்குடியரசு) ஜோடி, மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)-கோகோ வாடெவெக்கி (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது.

Sania Mirza becomes sole World No. 1 in women's doubles

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி 7-5, 6-4 என்ற நேர்செட்டில் மார்ட்டினா ஹிங்கிஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

மார்ட்டினா ஹிங்கிசிடம் இருந்து பிரிந்த பின்னர் சானியா மிர்சா வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். அதுவும் மார்டினா ஜோடிக்கு எதிராக இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது சிறப்பு.

இந்த வெற்றியின் மூலம் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தர வரிசையில் முதலிடம் பிடித்தார்.

Story first published: Tuesday, August 23, 2016, 14:05 [IST]
Other articles published on Aug 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+