Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் டென்னிஸ் சங்க பட்டம்.. வென்றது சானியா -பிளேக் ஜோடி

சிங்கப்பூர்: மகளிர் டென்னிஸ் சங்க போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா - ஜிம்பாப்வேயின் காரா பிளேக் ஜோடி பட்டம் வென்றது.

சானியா ஜோடி இறுதிப் போட்டியில் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான பெங் ஷுவாய் - ஷியா சுவெய் ஜோடியை வீழ்த்தியது சானியா ஜோடி.

பிளேக்குக்கு இது 3வது மகளிர் டென்னிஸ் சங்க பட்டமாகும். இதற்கு முன்பு இவர் 2008, 2008 ஆகிய ஆண்டுகளில் லீஸல் ஹூபருடன் இணைந்து இப்பட்டத்தை வென்றுள்ளார். அதேசமயம், சானியாவுக்கு இது முதல் பட்டமாகும்.

இறுதிப் போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை சானியா ஜோடியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இது ஒரு பக்க போட்டியாக மாறிப் போய் விட்டது.

Sania Mirza, Cara Black clinch doubles title at WTA Finals

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளைப் பொறுத்தவரை 35 வயதான பிளேக் ஐந்து இரட்டையர் மற்றும் ஐந்து கலப்பு இரட்டையர் பட்டங்களை வைத்துள்ளார். இந்த ஆண்டுடன் அவர் மகளிர் டென்னிஸ் சங்கப் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார். எனவே அடுத்த ஆண்டு போட்டியில் சானியா, ஷியா சுவெய்யுடன் இணைகிறார்.

Story first published: Monday, October 27, 2014, 10:33 [IST]
Other articles published on Oct 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+