Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் டென்னிசில் அதிர்ச்சி.. இரட்டையர் பிரிவில் சானியா, லியாண்டர் பயஸ் தோல்வி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவும், இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசும் தோற்றதன் மூலம், இந்திய ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியே பரிசாக கிடைத்தது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தற்போது நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சானியா மிர்சா மற்றும் ப்ருனோ சோரஸ் ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா மற்றும் லுகாஸ் குபோட் ஜோடியை எதிர்கொண்டது.

Sania Mirza, Leander Paes lose in US Open doubles

65 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 3-6 மற்றும் 3-6 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி தோல்வியை தழுவியது. முன்னதாக நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பயர் மற்றும் ஸ்பெயினின் பெர்னான்டோ வெர்டாஸ்கோ இணை, 5-7, 6-4 மற்றும் 3-6 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன்-சாம் குவர்ரே ஜோடியிடம் தோற்றது.

Story first published: Saturday, September 5, 2015, 13:03 [IST]
Other articles published on Sep 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+