For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015ல் 8வது டபுள்ஸ் பட்டத்தை வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி

By Siva

டெல்லி: சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது இந்த ஜோடி இந்த ஆண்டில் வென்றுள்ள 8வது கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஹாவ் சிங் சான், யுங் ஜான் சான் ஜோடியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி. இதன் மூலம் சானியா-ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டின் 8வது பட்டத்தை வென்றுள்ளது.

சானியா மிர்சா சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் சேர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு சானியா-ஹிங்கிஸ் ஜோடியின் ஆண்டு என்றே கூற வேண்டும்.

அந்த ஜோடி சீன ஓபன் போட்டியையும் சேர்த்து மொத்தம் 8 போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளது. அதில் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்களும் அடக்கம். அந்த ஜோடி இந்தியன் வெல்ஸ், மயாமி, சார்லஸ்டன், குவாங்ஜு, வூஹான் ஆகிய இடங்களில் விளையாடி பட்டம் வென்றுள்ளது.

இது குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

#SanTinaவுக்கு 8வது கோப்பை என்று கூறி வெற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Story first published: Sunday, October 11, 2015, 16:38 [IST]
Other articles published on Oct 11, 2015
English summary
Sania Mirza- Martina Hingis pair has won the doubles title of China open. This pair has won 8 titles in 2015 including the China open.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+