Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2015ல் 9வது பட்டத்தை வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி: உலக அளவில் நம்பர் 1

டெல்லி: சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சிங்கப்பூரில் நடந்த டபுள்யூடிஏ(உலக பெண்கள் டென்னிஸ்) டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டில் சான்டினா ஜோடி வென்ற 9வது கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவு போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்றாக விளையாடும் சானியா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடியை ரசிகர்கள் சான்டினா என்று அழைத்து வருகிறார்கள்.

இந்த ஜோடி வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறது.

8 பட்டங்கள்

8 பட்டங்கள்

சான்டினா ஜோடி இந்த ஆண்டு பெய்ஜிங், வூஹான், குவாங்சூ, யு.எஸ். ஓபன், விளம்பிள்டன், சார்லஸ்டன், மயாமி மற்றும் இந்தியன் வெல்ஸில் வெற்றி பெற்று 8 கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.

9வது பட்டம்

9வது பட்டம்

8 கோப்பைகளை வென்ற சான்டினா ஜோடி சிங்கப்பூரில் நடந்த டபுள்யூடிஏ(உலக பெண்கள் டென்னிஸ்) டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்றுள்ளது. இதன் மூலம் இந்த ஜோடி இந்த ஆண்டு 9 கோப்பைகளை வென்றுள்ளது.

சானியா

சானியா

சானியா முன்னதாக கடந்த ஆண்டு காரா பிளாக்குடன் சேர்ந்து டபுள்யூடி ஏ கோப்பையை வென்றார். டபுள்யூடிஏ இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸுக்கு இது 50வது வெற்றிக் கோப்பை ஆகும்.

நம்பர் 1

நம்பர் 1

டபுள்யூடிஏ தர வரிசையில் உலக அளவில் இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸும், ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸும் முதலிடத்தை பிடித்துள்ளனர். இதற்கான கோப்பை சான்டினா ஜோடிக்கு கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Story first published: Monday, November 2, 2015, 13:16 [IST]
Other articles published on Nov 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+