Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நின்று போனது சானியா- ஹிங்கிஸின் தொடர் வெற்றி வேட்டை!

டோஹா: சர்வதேச டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் தொடர்ந்து 41 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்து வந்த மார்ட்டினா ஹிங்கிஸ் மற்றும் சானியா மிர்ஸா ஜோடியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது ரஷ்ய ஜோடியான எலீனா வெஸ்னினா - டாரியா கஸக்தினா ஜோடி.

41 போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்திருந்தது சானியா - ஹிங்கிஸ் ஜோடி. தற்போது அந்த வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டது ரஷ்ய ஜோடி.

டோஹாவில் நடந்த கத்தார் ஓபன் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடியை, ரஷ்ய ஜோடி 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

நம்பர் ஒன் ஜோடி

நம்பர் ஒன் ஜோடி

உலகின் நம்பர் ஒன் மகளிர் இரட்டையர் ஜோடியாக வலம் வருகிறது சானியா - ஹிங்கிஸ் ஜோடி. இவர்கள் சந்தித்த போட்டியெல்லாம் வெற்றிதான்.

தொடர்ந்து 41 வெற்றிகள்

தொடர்ந்து 41 வெற்றிகள்

மேலும் இந்த ஜோடியானது தொடர்ந்து 41 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.

கத்தார் ஓபன்

கத்தார் ஓபன்

இந்த நிலையில் சானியா -ஹிங்கிஸ் ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றது. இதில் ரஷ்யாவின் எலீனா, டாரியா ஜோடியா இந்திய - சுவிஸ் ஜோடி எதிர்கொண்டது.

போராட்டம்.. தோல்வி

போராட்டம்.. தோல்வி

இப்போட்டியில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வென்றது. ஆனால் அடுத்த 2 செட்களை இழந்தது. முடிவில் 2-6, 6-4, 10-5 என்ற கணக்கில் ரஷ்ய ஜோடி, சானியா -ஹிங்கிஸ் ஜோடியை வீழ்த்தியது.

கடந்த ஆகஸ்ட்டுக்குப் பிறகு

கடந்த ஆகஸ்ட்டுக்குப் பிறகு

கடந்த ஆகஸ்ட் மாதம் சின்சினாட்டியில் நடந்த போட்டியில் சானியா - ஹிங்கிஸ் இணை தோற்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்தது.

3 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

3 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

இந்த இடைப்பட்ட காலத்தில் 3 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இந்த ஜோடி வென்றிருந்தது. தற்போது தோல்விப் பாதையில் இறங்கி விட்டது.

இணைந்து 4 பட்டங்கள்

இணைந்து 4 பட்டங்கள்

சானியா - ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டு 4 பட்டங்களை வென்றுள்ளது. மேலும் மொத்தமாக 13 பட்டங்களை இவர்கள் வென்றுள்ளனர்.

Story first published: Friday, February 26, 2016, 11:23 [IST]
Other articles published on Feb 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+