Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்! விம்பிள்டனை தொடர்ந்து அசத்தல்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் டெல்லாகுவா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடியை எதிர்கொண்டது.

Sania Mirza-Martina Hingis won the 2015 US Open women's doubles title

மொத்தம் 1 மணி நேரம், 10 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் இந்த ஆண்டு 'கிராண்ட்ஸ்லாம்' அரங்கில் தொடர்ச்சியாக 2வது பட்டம் வென்றது. இதற்கு முன், சமீபத்தில் முடிந்த விம்பிள்டனில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 14, 2015, 9:09 [IST]
Other articles published on Sep 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+