Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெட் கோப்பை டென்னிஸ் போட்டி - 5 பேர் அணியில் சானியா மிர்சா இடம்பிடிப்பு

சர்வதேச டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 5 பேர் கொண்ட பெட் கோப்பை டென்னிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

குழந்தை பெற்றதால் கடந்த 3 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகியிருந்த சானியா மிர்சா தற்போது மீண்டும் விளையாட உள்ளார்.

ஜனவரியில் இருந்து மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாட உள்ளதாக சானியா மிர்சா கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதற்கான பயிற்சியை துவக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இடைவெளி விட்ட சானியா

இடைவெளி விட்ட சானியா

சர்வதேச அளவில் டென்னிஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவை தலைநிமிர்த்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா குழந்தை பெற்றதால் கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார்.

சானியா அறிவிப்பு

சானியா அறிவிப்பு

இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சானியா மிர்சா தெரிவித்திருந்தார். இதற்கான பயிற்சியையும் தான் துவங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சானியா மிர்சா இடம்பிடிப்பு

சானியா மிர்சா இடம்பிடிப்பு

இதனிடையே, 5 பேர் கொண்ட பெட் கோப்பை அணியில் தற்போது சானியா மிர்சா இடம்பிடித்துள்ளார். கடந்த 2016ல் இந்த கோப்பைக்காக இறுதியாக விளையாடியா சானியா மிர்சா தற்போது 2020க்கான போட்டியில் பங்கேற்கிறார்.

பயிற்சியாளர் அங்கிதா பாம்ப்ரி

பயிற்சியாளர் அங்கிதா பாம்ப்ரி

ஐந்து பேர் கொண்ட இந்த அணியில் தனிநபர் பிரிவில் முதலிடத்தில் உள்ள அங்கிதா ரெய்னாவும் இடம்பெற்றுள்ளார். அவருடன் ரியா பாட்டியா, ருதுஜா போசேல், கர்மன் கவுர் தண்டியும் அணியில் இடம் பிடித்துள்ளனர். அணியின் பயிற்சியாளராக அங்கிதா பாம்ப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, December 25, 2019, 12:06 [IST]
Other articles published on Dec 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+