Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து வெற்றி...புதிய உலக சாதனையை நோக்கி சானியா - ஹிங்கிஸ் ஜோடி !

சிட்னி: தொடர்ச்சியாக 28 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள சானியா - ஹிங்கிஸ் ஜோடி புதிய உலக சாதனை படைக்க காத்திருக்கிறது.

சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சென் லியாங்-ஷூவாய் பெங் ஜோடியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது சானியா மிர்சா ஜோடி. இதன்மூலம் தொடர்ச்சியாக இந்த ஜோடி 28 ஆட்டங்களில் வெற்றி பெற்று, அதிக தொடர் வெற்றிக்கான உலக சாதனையை சமன் செய்துள்ளது.

Sania Mirza new world record with Martina Hingis

கிகி பெர்னாண்டஸ்-நடாஷா சுவரேவா ஜோடி 28 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று 1994ம் ஆண்டு சாதனை உச்சத்தில் இருந்தது. அதன்பின்னர் எந்த ஜோடியும் இந்த சாதனையை நெருங்கவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பிறகு சானியா-ஹிங்கிஸ் ஜோடி தற்போது சமன் செய்துள்ளது.

இரட்டையர் தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, சிட்னி போட்டியின் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அனஸ்தாசியா ரோடினோவா-அரினா ரோடினோவா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகளிருக்கான பிரிஸ்பேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சனிக்கிழமை பட்டம் வென்றது.

Story first published: Thursday, January 14, 2016, 2:00 [IST]
Other articles published on Jan 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+