Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வருட இடைவெளி.. ஆனாலும் வேகம் குறையல.. 42 ஆண்டுகால வரலாற்று போட்டி..சானியா - போபண்ண ஜோடி அசத்தல்!

லண்டன்: 3 வருடங்களுக்கு பிறகு டென்னிஸுக்கு திரும்பியுள்ள சானியா மிர்சா விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் அசத்தியுள்ளார்.

மிகவும் பிரபலமான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் வென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில், நடைபெற்று வருகிறது.

இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் அனுபவ வீரர்களான இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்று போட்டி

வரலாற்று போட்டி

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது.

1968-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முழுமையான இரு இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மோதியது இதுவே முதல் முறை ஆகும்.

விறுவிறுப்பான போட்டி

விறுவிறுப்பான போட்டி

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சானியா - போபண்ணா ஜோடி, 2வது சுற்றில் சற்று விட்டுப்பிடித்தனர். டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் சானியா - போபண்ணா ஜோடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா - மெட்டெக் இணை, அலெக்ஸா குராச்சி-தேசிரே க்ராவ்சிக் இணையை 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றது.

நீண்ட கால இடைவெளி

நீண்ட கால இடைவெளி

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற சானியா மிர்சா, அதன்பிறகு குழந்தை பிறப்பு காரணமாக விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் ஒலிம்பிக் 2021-யை கருத்தில்கொண்டு தற்போது மீண்டும் டென்னிஸ் உலகிற்கு திரும்பியுள்ளார்.

முக்கியமான தொடர்

முக்கியமான தொடர்

விம்பிள்டன் தொடர் சானியா மிர்சாவுக்கு மிகவும் முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இதில் சானியா மிர்சா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிட்டால் ஒலிம்பிக் 2021-ல் இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்து விடும். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 மகளில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக சானியா மிர்சா-அங்கிடா ரெய்னா ஆகியோர் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 3, 2021, 22:07 [IST]
Other articles published on Jul 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+