Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: கலப்பு இரட்டையர் டென்னிஸ் அரை இறுதியில் சானியா-போபண்ணா இணை!

ரியோ: ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டென்னிஸில் இந்தியாவின் சானியா- போபண்ணா இணை அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 75 கிலோ எடைபிரிவு குத்துச் சண்டையில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன்போபண்ணா இணை காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆண்டி முர்ரே-ஹீதர் வாட்சன் இணையை எதிர் கொண்டது.

sania

இந்த ஆட்டத்தில் சானியா-போபண்ணா இணை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றது. இதன் மூலம் அரை இறுதிக்குள் சானியா- போபண்ணா இணை நுழைந்தது.

விகாஸ் கிருஷ்ணன்

இதனிடையே மிடில் வெயிட் 75 கிலோ எடைபிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கியின் ஒண்டெர் சிபலை எதிர் கொண்டார். இதில் விகாஸ் கிருஷ்ணன் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Saturday, August 13, 2016, 10:12 [IST]
Other articles published on Aug 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+