Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராயிங் ரூமுக்குப் போகப் போறேன்.. போட்டோ போட்டு சிரிப்பலையை ஏற்படுத்திய சானியா!

ஹைதராபாத்: டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா வர வர இன்ஸ்டாகிராமில் ரொம்ப பிசியாக இருக்கிறார். அடுத்தடுத்து ஏதாவது போட்டோ, வீடியோ போட்டுக் கொண்டே இருக்கிறார். ரசிகர்களும் விடாமல் பார்த்து ரசித்து வைக்கிறார்கள்.

எல்லோரையும் போலவே வெளியே போக முடியாமல், விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார் சானியா மிர்ஸா. இதனால் சமூக வலைதளங்களில் அவர் பிசியாக காணப்படுகிறார். அடிக்கடி ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பால் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

சமீபத்தில்தான் பெட் கோப்பை ஹார்ட் விருதைப் பெற்றார் சானியா. இந்தியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் டென்னிஸ் வீராங்கனை இவர்தான். அந்த வகையில் இவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

 ஹார்ட் விருது

ஹார்ட் விருது

இதுதொடர்பாக சமீபத்தில் நன்றி தெரிவித்து போஸ்ட் போட்டிருந்தார் சானியா மிர்ஸா. அதில், பெட் கோப்பை ஹார்ட் விருதை வென்றதற்கு இந்தியராக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எனது ரசிகர்கள்தான் இதற்குக் காரணம். எனக்காக வாக்களித்து விருது கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி. நாட்டுக்கு மேலும் பல பெருமைகளைக் கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார் சானியா மிர்ஸா.

 சானியாவின் மகன்

சானியாவின் மகன்

கடந்த 2018ம் ஆண்டு சானியாவுக்கு இஸான் என்ற மகன் பிறந்தான். அதன் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அவர் மீண்டும் விளையாடத் தொடங்கினார். அடுத்தடுத்து சில வெற்றிகளையும் பெற்று அசத்தினார். தற்போது லாக்டவுன் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போய் விட்டது. இதனால் வீட்டில் தனது மகனுடனும், இன்ஸ்டாகிராமில் பொழுதைக் கழித்து கொண்டிருக்கிறார் சானியா மிர்ஸா.

 டிக்டாக் போட்டு பொழுதுபோக்கு

டிக்டாக் போட்டு பொழுதுபோக்கு

சமீபத்தில் கூட டிக்டாக் வீடியோ போட்டு அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் சானியா. அதேபோல தற்போது ஒரு புகைப்படத்தைப் போட்டு அதற்கு காமெடியான கேப்ஷனையும் போட்டு கலகலக்க வைத்துள்ளார். நல்ல அலங்கார உடையுடன் கம்பீரமாக காணப்படும் புகைப்படத்தைப் போட்டுள்ள சானியா மிர்ஸா, அதற்கு, அப்பாடா ஒரு வழியாக நான் டிராயிங் ரூமுக்குப் போகப் போறேன் என்று போட்டு சிரிப்பலையை பரப்பியுள்ளார்.

 உற்சாக ரசிகர்கள்

உற்சாக ரசிகர்கள்

விடுவார்களா ரசிகர்கள்.. உடனே கிளம்பி விட்டனர்.. அமேஸிங் லுக் என்று பல கமெண்டுகள். லுக்கிங் கிரேட் மேம் என்று சிலர் சிலாகித்துள்ளனர். பலர் இந்த கலரில் நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க என்று பாராட்டியுள்ளனர். இதையெல்லாம் ரசித்துப் படித்துக் கொண்டுள்ளார் சானியா. தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது பாராட்டுக்குரியதுதான்.

Story first published: Monday, May 18, 2020, 15:02 [IST]
Other articles published on May 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+