அவனும் நானும்.. மகனுடன் இணைந்து வெற்றிப் பயணம்... புகைப்படம் வெளியிட்டு சானியா உற்சாகம்!
துபாய் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது மகன் இஷானுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய மகனுடன் இணைந்து தான் தனது வெற்றிப் பயணத்தை தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தாயும் மகனும் ஒரே மாதிரியான உடையுடன் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்துள்ளது க்யூட்டாக உள்ளது.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கடந்த 2018ல் இஷானை பெற்றெடுத்தார். அதுமுதல் அவர் தனது தாய்மையை வெளிப்படுத்தும் பல்வேறு தருணங்களை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தாய்மை நம்மை மிகச்சிறந்த நபராக மாற்றும் என்று தனது இன்ஸ்டாகிராமில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மகன் இஷானுடன் ஒரே மாதிரியான போஸ் மற்றும் உடையுடன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய மகனுடன் இணைந்து தான் வெற்றிப் பாதையில் நடைபோட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications