Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் விளையாடாதபோது மட்டும் என்னைப் பற்றி புறணி பேசுவதில்லை மீடியா - சானியா

ஹைதராபாத்: நான் விளையாடும் போதெல்லாம் என்னைப் பற்றி முட்டாள்தனமாக எழுதுகிறது மீடியா. அதேசமயம், நான் விளையாடாத சமயங்களில் என்னை விட்டு விடுகிறார்கள் என்று கூறியுள்ளார் சானியா மிர்ஸா.

இதுகுறித்து ஹைதராபாத்தில் நடந்த இளம் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு சானியா பேசுகையில், நான் விளையாடாத சமயங்களில் செய்தித்தாள்களை அதிகம் படிப்பேன். அப்போதுதான் என்னைப் பற்றிய முட்டாள்தனமா செய்திகள், வதந்திகள் எதுவும் அதில் இருக்காது.

எனது சுய நம்பிக்கைதான் என்னை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்தது. என்னை விமர்சிப்பவர்களுக்கும் பதிலடி கொடுத்தது.

Sania Mirza Says she is Spared of Nonsense Writing Only When She's Not Playing

இப்படி விமர்சிப்பவர்கள், வாழ்க்கையில் ஒரு நாளாவது டென்னிஸ் பேட்டையோ அல்லது கிரிக்கடெ் பேட்டையோ தூக்கிப் பார்த்திருக்கக் கூடா மாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஆனாலும் என்னைப் பற்றி அப்படி எழுதுகிறா்கள், விமர்சிக்கிறார்கள்.

நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அப்படி நம்பினால் எதுவும் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது.

2010ம் ஆண்டுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அப்போதுதான் நான் பல அறுவைச் சிகிச்சைகளுக்கு உட்பட்டேன். கிட்டத்தட்ட 6 மாதம் காயமடைந்திருந்தேன். எனக்கு அந்த ஆண்டில்தான் திருமணமும் கூட நடந்தது. அந்த ஆறு மாதமும் நான் முடங்கிப் போயிருந்தேன்.

தலையைக் கூட என்னால் சீவ முடியவில்லை. உடைகளை கூட மாற்ற முடியவில்லை. எனவே அந்த சமயத்தில் டென்னிஸ் என்னை விட்டு விலகியிருந்தது. அதுதான் எனது வாழ்க்கையின் மிகவும் கஷ்டமான காலம்.

சிறு வயதில் சில நேரங்களில் நான் பசு மாட்டின் சாணியை வைத்து கூட பிராக்டிஸ் செய்திருக்கிறேன் என்றார் சானியா.

Story first published: Tuesday, November 25, 2014, 7:15 [IST]
Other articles published on Nov 25, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+