Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்கா, தீபிகா இல்லாட்டி பரினிதி.. இது சானியாவின் ஆசை!

மும்பை: எனது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் எனது வேடத்தில் நடிக்க பரினிதி சோப்ரா, இல்லாவிட்டால் தீபிகா படுகோன், இல்லாவிட்டால் அனுஷ்கா சர்மா ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என்று சானியா மிர்ஸா கூறியுள்ளார்.

இந்திய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்ஸா 'Ace Against Odds' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சல்மான் கான், ஷாருக் கான், பரினிதி சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சல்மான் கான், சானியாவை எனக்கு பல வருடமாக தெரியும். அவர் மட்டும் சினிமாவுக்கு வந்தால் கலக்குவார் என்று கூறினார்.

சானியா பேச வந்தபோது உங்களது கதை படமாக எடுக்கப்பட்டால் சானியா மிர்ஸா கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சானியா அளித்த பதில் சுவாரஸ்யமானது...

சினிமாவில் நடிக்க நேரம் இல்லை

சினிமாவில் நடிக்க நேரம் இல்லை

சானியா பேசுகையில், நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று எப்போதும் கூறியதில்லை. என்னால் நடிக்க முடியும். ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. இப்போதைக்கு அதைச் செய்வேன் என்று நினைக்கவில்லை.

பரா கான் படமாக்கவில்லை

பரா கான் படமாக்கவில்லை

பரா கான் எனது கதையை படமாக்கப் போவதாக வரும் செய்திகள் தவறு. அப்படியெல்லாம் இல்லை. அவர் எனது நெருங்கிய தோழி. இதை வைத்து அவர் படம் எடுக்கப் போவதாக கூறி விட்டார்கள் போலும்.

நடந்தால் நடக்கட்டும்

நடந்தால் நடக்கட்டும்

இருப்பினும் எனது வாழ்க்கைக் கதையை படமாக்குவது குறித்து பேச்சுக்கள் உள்ளன. பரா எடுக்கிறாரோ இல்லை வேறு யாரும் எடுக்கிறார்களோ. அது எனக்குத் தெரியாது. அப்படி நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும். ஆனால் இப்போதைக்கு எதுவும் இல்லை.

தீபிகா- அனுஷ்கா- பரினிதி

தீபிகா- அனுஷ்கா- பரினிதி

எனது கதை படமாக்கப்பட்டால் நான் சிலருடைய பெயர்களை பரிந்துரைத்துள்ளேன். பரினிதி சோப்ரா, தீபிகா, அனுஷ்கா.. இவர்கள் எல்லாம் எனது வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார்கள். திறமையான நடிகைகள் இவர்கள், துடிப்பானவர்கள்.

பரினிதி பெஸ்ட்

பரினிதி பெஸ்ட்

இவர்களில் யாராவது ஒருவர் நடித்தால் அது எனக்குப் பெருமையாக இருக்கும். பரினிதியும் நானும் நல்ல தோழிகளும் கூட. எனவே அவரைப் பார்க்கும் பலருக்கும் என்னைப் பார்ப்பது போலவே இருக்கும் என்பதில் உண்மை உள்ளது என்றார் சானியா.

Story first published: Tuesday, July 19, 2016, 14:27 [IST]
Other articles published on Jul 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+